பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 22 - பெரிய புராண விளக்கம்.10

திருப்பதிகம்-அந்தத் திருஞான சம்பந்த மூர்த்தி நாய னார் மேலே கூறிய கருத்துக்களை வைத்து ஒரு திருப்பதி: கத்தைப் பாடியருளி. அவ்வாறு அந்த நாயனார் பாடியருளிய திருப்பதிகம் காந்தாரப் பஞ்சமப் பண் அமைந்த பஞ்சாக் கரத் திருப்பதிகம் ஆகும். அந்தப் பதிகத்தில் வரும் 10-ஆம் பாசுரத்தில் மேலே கூறிய கருத்து அமைந்துள்ளது. அந்தப் பாசுரம் வருமாறு:

புத்தர் சமண் கழுக்கையர் பொய்கொளாச்

சித்தத் தவர்கள் தெளிந்து தேறின. வித்தக நீறணி வார்வி னைப்பகைக் கத்திர மாவன அஞ்செழுத்துமே.'

நிறைவித்து-அந்தத் திருப்பதிகத்தைப் பாடி நிறை வேற்றிவிட்டு. த், சந்தி, திருக்கடைக்காப்பு-அந்தத் திருப்பதி: கத்தின் இறுதிப் பாசுரத்தில் தம்முடைய திருநாமத்தை வைத்துப் பாடியருளிய பாசுரத்தை. ச்: சந்தி. சாத்தி-பாடி, யருளி. அந்தப் பாசுரம் வருமாறு:

' நற்றமிழ் ஞானசம் பந்தன் நான்மறை கற்றவன் காழியர் மன்னன் உன்னிய அற்றமில் மாலையீ ரைந்தும் அஞ்செழுத் துற்றன. வல்லவர் உம்பர் ஆவரே.'

இருக்குமொழி-தமிழ் வேதமாகிய திருப்பதிகங்களைப் பாடியருளும். ப்: சந்தி. பிள்ளையார்-ஆளுடைய பிள்ளை யாராகிய அந்தத் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார். எதிர்-பிரமபுரீசருடைய சந்நிதியில் அந்த ஈசுவரருக்கு முன் னால். தொழுது-தரையில் விழுந்து வணங்கிவிட்டுப் பிறகு. நின்று அருள-தரையிலிருந்து எழுந்து நின்று கொண்டருள. அருள்-பிரமபுரீசர் வழங்கிய திருவருளையும். கருணைகருணையையும்.த்:சந்தி, திருவாளனார்-திருவாளனாராகிய அந்த நாயனார் பெற்ற. அருள்-திருவருளை. கண்டு-தெரிந்து கொண்டு. அமரர் எலாம்.தேவர்கள் எல்லாரும். எலாம்: இடைச்குறை. பெருக்க-பெருகி எழுமாறு. விசும்பினில்