பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 பெரிய புராண விளக்கம்-10

சிவபாத இருதயர் தங்களுக்கு ஒப்பாக ஏதும் இல்லாமல் எல்லாப் பொருள்களும் தாழ்வாகிப் போன செந்தாமரை மலர்களைப் போன்ற தம்முடைய திருக்கரங்கனைத் தம் முடைய தலையின் மேல் குவித்துக் கும்பிட்டு மகிழ்ச்சியை அடைந்து கூத்தாடி வேறாக உண்டான பயத்தோடும் அதிசய உணர்ச்சியோடும், லிருப்பத்தோடும் தமிழ்ப் புலவர்கள் பாடும் அருமையாக விளங்கும் செந்தமிழ் மொழி யின் அர்த்தமாக விளங்கும் பிரமபுரீசருடைய குறித்த எண் ணத்தைச் சிந்தித்துப் பார்ப்பவரானார். பாடல் வருமாறு:

' ஈறில் பெருந்தவம் முன்செய்து தாதை எனப்பெற்றார்"

மாறுவி ழுந்த மலர்க்கை குவித்து மகிழ்ந்தாடி வேறுவி ளைந்த வெருட்சி வியப்பு விருப்போடும் கூறும்அருங் தமிழின் பொருளான குறிப்போர்வார்."

ஈறு-இத்தகைய ஆண் குழந்தையைப் பெறும் பொருட்டு முடிவு. இல்-இல்லாத கடைக்குறை. பெரும்-பெருமையைப் பெற்று விளங்கும். தவம்-தவத்தை. முன்-முன்பு, செய்துபுரிந்து. தாதை-திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாருடைய தந்தையார்: ஒருமை பன்மை மயக்கம். என- என்று கூற: இடைக்குறை. ப், சந்தி. பெற்றார்-பாக்கியத்தைப் பெற்ற வராகிய சிவபாத இருதயர்.மாறு-தங்களுக்கு ஒப்பாக ஏதும் இல்லாமல். விழுந்த-எல்லாப் பொருள்களும் தாழ்வாகிப் போன மலர்-செந்தாமரை மலர்களைப் பேன்ற; ஒருமை பன்மை மயக்கம். க்: சந்தி. கை-தம்முடைய திருக்கரங் களை ஒருமை பன்மை மயக்கம். குவித்து-தம்முடைய தலையின் மேல் வைத்துக் கும்பிட்டு. மகிழ்ந்து-மகிழ்ச்சியை அடைந்து. ஆடி-கூத்தாடி. வேறு-வேறாக. விளைந்த-உண் டான. வெருட்சி-பயத்தோடு. வியப்பு-அதிசய உணர்ச்சி யோடும். விருப்போடும்-விருப்பத்தோடும். கூறும்-செந்தமிழ் புலவர்கள் பாடும். அரும்-அருமையாக விளங்கும். தமிழின்செந்தமிழ் மொழியினுடைய. பொருள் ஆன-அர்த்தமாக விளங்கும் பரம்பொருள் ஆக விளங்கும் பிரமபுரீசர்.