பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் புராணம் 12?

மலர்கள் மிகுதியாகப் பரப்பப் பெற்ற திருக்கோயிலுக்கு உள்ளே நுழைந்தார். பாடல் வருமாறு :

அண்ணல் அணைந்த மைகண்டு

தொடர்ந்தெழும் அன்பாலே

மண்மிசை கின்ற மறைச்சிறு

போதகம் அன்னாரும்

கண்வழி சென்ற கருத்து

விடாது கலந்தேகப்

புண்ணியர் கண்ணிய பூமலி

கோயிலின் உட்புக்கார்.'

அண்ணல் தம்முடைய தலைவராகிய தோனியப்பர். அணைந்தமை-தோணியை அடைந்த தன்மையை. கண்டு. பார்த்து. தொடர்ந்து-தம்முடைய தி ரு வு ள் ள த் தி ல் தொடர்ச்சியாக அமைந்து. எழும்-பொங்கி எழும். அன்பால்பக்தியினால், ஏ : அசைநிலை. மண்மிசை-தரையின்மேல். நின்ற-நின்று கொண்டிருந்த மறை-வேதியரும்; தினை மயக்கம். ச் : சந்தி. சிறு-சிறிய. போதகம்-யானையை. அன்னாரும்-போன்றவருமாகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரும். கண்-தம் கண்களினுடைய ; ஒருமை பன்மை மயக்கம். வழி-வழியாக. சென்ற-போன. கருத்து-தம்முடைய திருவுள்ளத்தை விடாது-விட்டு விடாமல். கலந்து-சேர்ந்து. ஏக-செல்ல. ப் சந்தி. புண்ணியர்-புண்ணியராகிய பிரம புரீசர். நண்ணிய-எழுந்தருளியுள்ள. பூ-மலர்கள்; ஒருமை பன்மை மயக்கம். மவி-மிகுதியாகப் பரப்பப் பெற்ற. கோயிலின்-திருக்கோயிலுக்கு. உள்-உள்ளே. பு க் த .

நுழைந்தார்.

பிறகு வரும் 85-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

'இத்தகைய ஆண் குழந்தையைப் பெறும் பொருட்டு முடிவு இல்லாத பெருமையைப் பெற்று விளங்கும் தவத்தை முன்பு செய்து திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாருடைய தந்தையார் என்று கூறம் பாக்கியத்தைப் வெற்றவராகிய