பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.3 26 பெரிய புராண விளக்கம்-10

அனைவுற-தம்மை அடைவதற்காக. வந்து-தம்முடைய திருவுள்ளத்தில் வந்து. எழும்-மேலெழும். அறிவு-சிவ ஞானத்தை. தொடங்கின-பெற ஆரம்பித்த, அடியார்பால்தோணியப்பருடைய அடியவராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரிடம், இணை-ஒப்பு. இல்-இல்லாத: கடைக்குறை. பவம்-பிறப்புக்களாகிய; ஒருமை பன்மை மயக்கம். கிளர்-கிளர்ச்சியைப் பெற்று எழும். கடல்கள் -சமுத்திரங்கள். இகந்திட-அகன்று போகுமாறு. இருதம்முடைய இரண்டு. தாளின்-திருவடிகளாகிய, ஒருமை பன்மை மயக்கம். புணை-தெப்பத்தை. அருள்-வழங்கி யருளும். அம்-அழகிய கணர்-கண்களைப் பெற்றவரும். கணர்: இடைக்குறை. கண் : ஒருமை பன்மை மயக்கம். பொரு-போரைப் புரியும். விடை-இடப வாகனத்தின்மேல். தங்கிய-தம்மோடு தங்கியுள்ளவரும்; வினையாலணையும் பெயர். புணர்பாக தம்மிடம் பொருந்திய வாம பாகத்தில் எழுந்தருளியிருக்கும். துணையொடு-தம்முடைய தர்ம பத்தினியுமாகிய பெரிய நாயகியோடு. சுருதி-வேதங்கள்: ஒருமை பன்மை மயக்கம். தொடர்ந்த-தொடர்ந்து பின் சென்ற பெரும்-பெருமையைப் பெற்று விளங்கும். தோணிதிருத்தோணியை. இந்தத் தோணி சீகாழியில் உள்ள பிரமபுரீசர் ஆலயத்தில் இருக்கும் கட்டுமலையின் மேல் உள்ளது. அணைந்தார். அடைந்தார்.

அடுத்து வரும் 84-ஆம் செய்யுளின் உள்ளுறை வருமாறு:

“தம்முடைய தலைவராகிய தோனியப்பர் தோணியை அடைந்த தன்மையைப் பார்த்துத் தம்முடைய திருவுள்ளத் தில் தொடர்ச்சியாக அமைந்து மேலெழும் பக்தியினால் தரையின் மேல் நின்று கொண்டிருந்த வேதியரும், சிறிய யானையைப் போன்றவருமாகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரும் தம்முடைய கண்களின் வழியாகப் போன தம்முடைய திருவுள்ளத்தை விட்டு விடாமல் சேர்ந்து செல்வப் புண்ணியராகிய பிரமபுரீசர் எழுந்தருளியுள்ள