பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் புராணம் I2岳*

உராய்ந்து கீழே தள்ளிய. நிரை-வரிசையாக உள்ள மணி- . அந்தக் கிரீடங்களில் பதிக்கப் பெற்ற மாணிக்கங்கள்: ஒருமை பன்மை மயக்கம். சிந்திட-தரையில் சிந்த நீள்உயரமாக உள்ள. வானத்து-ஆகாயத்திலிருந்து பெய்யும், உறை-மழைத்துளிகள்; ஒருமை பன்மை மயக்கம். என. என்று கூறுமாறு; இடைக்குறை. வந்து உலகு-வந்து இந்த மண்ணுலகம். அடைய-முழுவதும். நிறைந்திட-நிரம்பவும். ஒவா-குறையாத. மெய்-உண்மையாக உள்ள. ப்: சந்தி, பொறை-பொறுமை. பெருகும்-தங்களுடைய திருவுள்ளங். களில் பெருகி எழும். தவ-தவத்தைப் புரிந்த முனிவர்முனிவர்கள்; ஒருமை பன்மை மயக்கம். எனும் என்னும்: இடைக்குறை. கடல்-சமுத்திரம். புடை-பக்கத்தில். சூழசுற்றியிருக்க.

பின்பு வரும் 83-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு : "தம்மை அடைவதற்காக தம்முடைய திருவுள்ளத்தில் வந்து மேலெழும் சிவஞானத்தைப் பெற ஆரம்பித்த தோணியப்பருடைய அடியவராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரிடம் ஒப்பு இல்லாத பிறப்புக்களாகிய கிளர்ச்சியைப் பெற்ற சமுத்திரங்கள் அகன்று போகுமாறு தம்முடைய இரண்டு திருவடிகளாகிய தெப்பத்தை வழங்கி யருளும் அழகிய கண்களைப் பெற்றவரும், போர் புரியும் இடப வாகனத்தின்மேல் தம்மோடு தங்கியுள்ளவரும், தம்மிடம் பொருந்திய வாம பாகத்தில் எழுந்தருளியிருக்கும் தம்முடைய தர்மபத்தினியுமாகிய பெரியநாயகியோடு வேதங்கள் தொடர்ந்து பின்சென்ற பெருமையைப் பெற்று விளங்கும் திருத்தோணியை அடைந்தார். பாடல் வருமாறு: "அணைவுற வக்தெழும் அறிவு தொடங்கின அடியார்பால் இணையில் பவம் கிளர் கடல்கள் இகந்திட இருதாளின் புணையருள் அங்கணர் பொருவிடை தங்கிய புணர் - - பாகத் துணையொ டணைந்தனர் சுருதி தொடர்ந்திட .

பெருந்தோணி."