பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் புராணம் 13 í

பன்மை மயக்கம். அல்லாதார்.அவ்வாறு பார்த்தவர்கள் அல்லாத வேறு மக்களும்; ஒருமை பன்மை மயக்கம். முப்புரி. மூன்று புரிகளைக் கொண்ட புரி: ஒருமை பன்மை மயக்கம். நூல்-பூணுாலை அணிந்து கொண்டிருக்கும். மறையோர்கள்சீகாழியில் வாழும் வேதியர்களும். உரோமமுகிழ்ப்பு-மயிர்க் கூச்சாகிய புளகாங்கிதத்தை. எய்தி-அடைந்து. இப்படிஇவ்வாறு நிகழ்ந்ததற்கு. ஒப்பது-நிகராகிய, ஒர்-ஒரு. அற்புதம்-வியப்பை உண்டாக்கும் நிகழ்ச்சி. எங்கு-எந்த உஊரில். உளது-நடந்திருக்கிறது: இடைக்குறை. என்று என்றே-என்று எனக் கூறி. ஏ : அசைநிலை. துப்பு. பவள்த்தை.உறழ்-போல உள்ள.வேணியர்-சடாபாரத்தைத் தம்முடைய தலையின் மேற் பெற்றவராகிய பரம புரீசருடைய. கோயிலின்-திருக்கோயிலுக்கு முன்னால் உயரமாக நிற்கும். வாயில்-கோபுரத்தின் முன்னால் உள்ள வாசலினுடைய. புறம்-வெளியிடத்தை, சூழ-சுற்றி வர,

பின்பு உள்ள 38-ஆம் பாடலின் கருத்து வருமாறு :

'சிவஞானமாகிய பாலைக் குடித்தருளியவராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் பிரகாசம் பொங்கி எழும் திருமாலாகிய இடபவாகனத்தின் மேல் ஏறிக் கொண்டு அழகைப் பெற்ற தங்கத்தைப் பதித்த தோணியில் தங்கி வீற்றிருந்த பெருமையைப் பெற்று விளங்கும் அழகிய வாழ்வாகிய தோனியப்பரைச் சந்தித்து, இந்தச் சீகாழியில் அடியேனை ஆளாக உடையவனாகிய தோனியப்பன் உமாதேவியாகிய பெரிய நாயகியோடும் கட்டு மலையில் வீற்றிருந்தான்' என எண்ணி அந்த நாயனார் அந்த இடத்தில் அந்தத் தோனியப்பருடைய சந்நிதியில் நின்று கொண்டு பின்வருமாறு திருவாய் மலர்ந்தருளிச் செய்தார்.' :பாடல் வருமாறு:

பொங்கொளி மால்விடை மீது புகுந்தணி பொற்றோணி தங்கி இருந்த பெருந்திரு வாழ்வு தலைப்பட்டே