பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 பெரிய புராண விளக்கம்-10

இங்கெனை ஆளுடையான் உமை யோடும் இருந்தான்" என்

றங்கெதிர் கின்று பகன்றார் ஞானத் தமுதுண்டார்.'

இந்தப் பாடலில் விற்பூட்டுப் பொருள்கோள் அமைந் துள்ளது. ஞானத்து-பெரிய நாயகியார் தம்முடைய கொங்கைகளிலிருந்து கறந்து ஒரு பொற்கிண்ணத்தில் வைத்துக் குழைத்த சிவஞானமாகிய, அமுது-பாலை. உண்டார்-குடித்தருளியவராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார். பொங்கு ஒளி-பிரகாசம் பொங்கி எழும். மால்திருமாலாகிய விடை-இடப வாகனத்தின் மீது-மேல், புகுந்து-ஏறிக் கொண்டு. அணி-அழகைப் பெற்ற. பொன். தங்கத்தைப் பதித்திருக்கும். தோணி சீகாழியில் உள்ள பரம புரீசர் ஆலயத்தில் விளங்கும் கட்டு மலையின் மேல் உள்ள தோணியில். தங்கி இருந்த-தங்கிக் கொண்டு வீற்றிருந்த, பெரும்-பெருமையைப் பெற்று விளங்கும். திரு-அழகிய, வாழ்வு-வாழ்வாகிய தோணியப்பரை. த ைல ப் ப ட் டுசந்தித்து தரிசித்து. மயில் வாகனனைச் சந்திக்கிலேன்.” என்று கந்தர் அலங்காரத்தில் வருவதைக் காண்க. ஏ : அசை நிலை. இங்கு-இந்தச் சீகாழியில், எனை-அடியேனை : இடைக்குறை ஆள் உடையான்-அடிமையாகப் பெற்ற வனாகிய தோணியப்பன். உமையோடும்-உமா தேவியாகிய பெரிய நாயகியோடும். இருந்தான்-கட்டு மலையில் வீற்றி ருந்தான். என்று-என எண்ணி, அங்கு-அந்த நாயனார் அந்த இடத்தில். எதிர்-அந்தத் தோனியப்பருடைய சந் நிதியில், நின்று-நின்று கொண்டு. பகன்றார்-பின் வருமாறு: திருவாய் மலர்ந்தருளிச் செய்தார்.

பின்பு உள்ள 89-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

'இனிய நாதத்தைப் பெற்ற ச, ரி, க, ம, ப, த, நிச என்னும் ஏழு சுவரங்களும் பொருந்திய சொற்சுவை, பொருட்சுவை என்னும் செழுமையைப் பெற்ற செந்தமிழ் மொழியில் அமைந்த திருப்பதிகங்கள் பரமேசுவரனாகிய