பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் புராணம் 133

பரமபுரீசனுக்கே செய்யுட் சொற்களை வைத்து முறையாகப் பாடியருளும் தொழும்பையும் அந்த பிரமபுரீசர் வழங்கிய திருவருளைப் பெற்ற சம்பந்தத்தோடும் பலவாகிய வேதங் களை முறையாக அத்தியயனம் செய்து நிறைவேற்றிய மறையவர்கள் பார்க்குமாறு விருப்பத்தோடு பெரிய நாய கியார் தம்முடைய கொங்கைகளிலிருந்து கறந்து ஒரு பொற் கிண்ணத்தில் வைத்துச் சிவஞானத்தைக் குழைத்துத் தந்த பாலின் மணம் கமழும் தங்கத்தைப் போன்ற அழகிய திருவாயைப் பெற்றவராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் பிரமபுரீசருடைய ஆலயத்திலிருந்து புறப்பட்டு வெளியில் எழுந்தருளிச் சென்றார். பாடல் வருமாறு:

' இன்னிசை ஏழும் இசைக்த செழுந்தமிழ் ஈசற்கே

சொன்முறை பாடு .ெ த ழு ம் ய ரு ள் பெற்ற தொடக்கோடும் பன்மறை வேதியர் காண விருப்பொடு பால்காறும் பொன்மணி வாயினர் கோயிலின் கின்று புறப்பட்டார்.'

இன்-இனிய நாதத்தைப் பெற்ற ஏழும்-ச, ரி, க, ம, ப, த, நிச என்னும் ஏழு சுவரங்களும். இசைந்த-பொருந்திய. செழும்-சொற்சுவை, பொருட்சுவை என்னும் செழுமை யைப் பெற்ற. தமிழ்-செந்தமிழ் மொழியில் அமைந்த திருப்பதிகங்கள்; ஆகுபெயர். ஈசற்கே-பரமேசுவரனாகிய பிரமபுரீசனுக்கே. பிரமபுரி-சீகாழி. சொல்-செய்யுட் சொற்களை; ஒருமை பன்மை மயக்கம். முறைபாடு-வைத்து முறையாகப் பாடியருளும். தொழும்பு-தொண்டினையும். அருள்-அந்தப் பிரமபுரீசர் வழங்கிய திருவருளையும். பெற்ற தொடக்கோடும்-பெற்ற தொடர்போடும். பல்-பலவாகிய. மறை-வேதங்களை முறையாக அத்தியயனம் செய்து நிறைவேற்றிய ஒருமை பன்மை மயக்கம். இப்போது இருக்கு வேதம், யஜுர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம் என்னும் நான்கு வேதங்களே இருந்தாலும் முன் காலத்தில் பல வேதங்கள் இருந்தன. 'அனந்தாவை வேதா" என்று வடமொழியில் வருவதைக் காண்க. வேதியர்