பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 பெரிய புராண விளக்கம்-10

மறையவர்கள்: ஒருமை பன்மை மயக்கம். காண-பார்க்கு மாறு. விருப்பொடு-விருப்பத்தோடு, பால்-பெரிய நாயகியார் தம்முடைய கொங்கைகளிலிருந்து கறந்து ஒரு பொற். கிண்ணத்தில் வைத்துச் சிவஞானத்தைக் குழைத்துத் தந்தி, பாலினுடைய நாறும்-நறுமணம் கமழும்.பொன்-தவத்தைப் போன்ற உவம ஆகுபெயர். மணி-அழகிய பவளத்தைப் போன்ற அதரங்களைப் பெற்ற' எனலும் ஆம்; உவம ஆகு பெயர். வாயினர்-திருவாயைப் பெற்றவராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார். கோயிலின் நின்று-பிரமபுர் சருடைய ஆலயத்திலிருந்து புறப்பட்டார்-புறப்பட்டு வெளியில் எழுந்தருளிச் சென்றார்.

அடுத்து வரும் 90-ஆம் கவியின் உள்ளுறை வருகிாக: 'அந்தத் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் தாம் விரும்பிய வியப்பை உண்டாக்கும் நெடுங்காலம் இருக்கும் திருவருளைப் பெற்ற தலைவனாகிய தோணியப்பனுடைய சந்நிதிக்கு முன்னால் உயரமாக உள்ள தளங்களோடு விளங்கும் கோபுரத்தின் முன்னால் உள்ள ஆலயத்தினுடைய வாசலுக்கு நேராக அடைந்து ஒளியை வீசும் பிறைச்சந்திர னோடு விளங்கும் சடாபாரத்தைத் தம்மு-ை4 தலையின் மேற் பெற்றவராகிய பிரமபுரீசருடைய திருத்தொண்டர்கள் நல்ல வாழ்வை அடையும் தோணிபுரமாகிய சீகாழியில் வாழும் மக்கள் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாருக்கு. எதிரில் சென்று அந்த நாயனாரை வரவேற்றுத் தோத்திரங் களைக் கூறுபவர்கள் ஆனார்கள்.' பாடல் வருமாறு: பேணிய அற்புதம் நீடருள் பெற்றபி ரான்முன்னே ணிேலை வில் திகழ் கோபுர வாயிலின் கேரெய்தி வாணில வில் திகழ் வேணியர் தொண்டர்கள் வாழ்வெய்தும் தோணிபுரத்தவர் தாம் எதிர் கொண்டு துதிக்கின்றார்." பேணிய-அந்தத் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் தாம் விரும்பிய, அற்புதம்-வியப்பை உண்டாக்குவதும்: வினையாலனையும் பெயர். நீடு.நெடுங்காலம் இருப்பதும்