பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் புராணம் 置35

ஆகிய; வினையாலணையும் பெயர். அருள் பெற்ற-திருவரு ளைப்பெற்ற பிரான்-தலைவனாகிய தோனியப்பனுடைய. முன்-சந்நிதிக்கு முன்னால், ஏ: அசை நிலை. நீள்-உயரமாக உள்ள. நிலையில்-தளங்களோடு: ஒருமை பன்மை மயக்கம்: உருபு மயக்கம்.திகழ்-விளங்கும். கோபுர-கோபுரத்திற்கு முன் னால் உள்ள வாயிலின்-ஆலயத்தினுடைய வாசலுக்கு.தேர்நேராக, எய்தி-அடைந்து. வாள். நிலாவை வீசும். நிலவில்பிறைச் சந்திரனோடு: உருபு மயக்கம். திகழ்-விளங்கும். வேணியர்-சடாபாரத்தைத் தம்முடைய தலையின் மேற் பெற்றவராகிய பி ர ம பு ரீ ச ரு ைட ய. பிரமபுரி-சீகாழி. தொண்டர்கள்-தி ரு த் .ெ தா ன் டர் க ள், வாழ்வு-நல்ல வாழ்க்கையை எய்தும்-அடையும் இடமாகிய, தோணி புரத்தவர் தாம்-தோணிபுரமாகிய சீகாழியில் வாழும் மக்கள்: ஒருமை பன்மை மயக்கம். தாம் : அசை நிலை. எதிர் கொண்டு-திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாருக்கு எதிரில் சென்று அந்த நாயனாரை வரவேற்று. துதிக்கின் றார்-பின் வருமாறு தோத்திரங்களைக் கூறுபவர்கள் ஆனார்கள்: ஒருமை பன்மை மயக்கம்.

பின்பு வரும் 91-ஆம் பாடலின் உள்ளுறை வருமாறு:

சீகாழியில் வாழும் மக்கள் முன்பிறவியில் புரிந்த தவத்தின் பயனாகத் திருவவதாரம் செய்தருளியவரே, வேதியர்களுக்குள் கெளண்டிய கோத்திரத்தில் பிறநதவர் களுக்குச் செல்வத்தைப் போன்றவரே, அறுபத்து நான்கு கலைகளைக் கற்றுத் தேர்ச்சியைப் பெற்ற அறிவைக கொண்ட ஆழமான சமுத்திரத்தைப் போன்றவரே; அந்தச் சமுத்திரத்தில் தோன்றிய அமிர்தத்தைப் போன்றவரே, அடியவர்களுக்கு முன்னால் எழுந்தருளி வந்து இந்த மண்ணுலகத்தின் மேல் தேவலோகத்தில் வாழும் தேவா களினுடைய ஒப்பற்ற தலைவனாகிய தோணியபனுடைய தர்மபத்தினியும் ச, ரி, க, ம, ப, த, நிச என்னும் ஏழு சுவரங்களைப் பெற்ற சங்கீதத்தைப் போன்ற பார்த்தை களைத் திருவாய் மலர்ந்தருளிச் செய்பவரும் ஆகிய பெரிய