பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

蕊36 பெரிய புராண விளக்கம்-18

நாயகி வழங்கிய திருவருளைப் பெற்றாய்” என்று திருஞான சமபந்த மூர்த்தி நாயனாரைப் பாராட்டுவார்கள். பாடல் வருமாறு: t

காழியர் தவமே, கவுணியர் தனமே, கலைஞானத் தாழிய கடலே, அதனிடை அமுதே, அடியார்முன் வாழிய வந்திம் மண்மிசை வானோர் தனிநாதன் ஏழிசை மொழியாள் தன்திரு வருள்பெற் றனை என்பார்."

காழியர்-சீகாழியில் வாழும் மக்கள்: ஒருமை பன்மை மயக்கம். தவமே-முன்பிறப்பில் புரிந்த தவத்தின் பயனாகத் திருவவதாரம் செய்தருளியவரே; ஆகு பெயர். கவுணியர்வேதியர்களுக்குள் கெளண்டின்ய கோத்திரத்தில் பிறந்தவர் களுக்கு: ஒருமை பன்மை மயக்கம். தனமே-செல்வத்தைப் போன்றவரே உவம ஆகு பெயர். கலை-அறுபத்து நான்கு கலைகளைக் கற்றுத் தேர்ச்சியைப் பெற்ற : ஒருமை பன்மை மயக்கம். ஞானத்து-அறிவைக் கொண்ட ஆழிய-ஆழமான. கடலே-டாற்கட லைப் போன்றவரே; உவம ஆகு பெயர். அறுப்த்து நான்கு கலைகள் இன்ன என்பதை வேறோரி டத்தில் கூறினோம்; ஆண்டுக் கண்டுணர்க. அதனிடை அந்தப் பாற்கடலில் தோன்றிய. அமுதே-அமுதத்தைப் போன்றவரே; உவம ஆகு பெயர். அடியார்-பிரமபுரீ சருடைய அடியவர்களுக்கு: ஒருமை பன்மை மயக்கம். முன்முன்னால். வாழிய: அசைநிலை வந்து இம்மண்மிசை-இந்த மண்ணுலகத்தின் மேல் திருவவதாரம் செய்தருளி வந்து. வானோர்-தேவலோகத்தில் வாழும் தேவர்களினுடைய; ஒா ை பன்மை மயக்கம். தனி-ஒப்பற்ற நாதன்-தலை வனாகிய தோணியப்பனுடைய தர்மபத்தினியும்; ஆகு பெயர். ஏழிசை- ச, ரி, க, ம, ப, த, நிச, என்னும் ஏழு சுவரங்களைப் பெற்ற சங்கீதத்தைப் போன்ற உவம ஆகு பெயர். மொழியாள் தன்-வார்த்தைகளைத் திருவாய் மலர்ந்தாளிச் செய்பவளும் ஆகிய பெரிய நாயகி. மொழி: ஒருமை பன்மை மயக்கம். தன் : அசை நிலை. திருவருள்