பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் புராணம் 9

பெய்து வேள்வியைப் புரியும் தன்மையைப் பெற்றவை என்று

கூறுமாறு அமைந்திருக்கின்றன. பாடல் வருமாறு:

பரந்தவிளை வயற்செய்ய பங்கயமாம் பொங்

- - கெரியில் வரம்பில்வளர் தேமாவின் கனிகிழிந்த மதுநறுநெய் கிரந்தரம்ள்ே இலைக்கடையால் ஒழுகுதலால்

நெடிதவ்வூர் மரங்களும்ஆ குதிவேட்கும் தகைய என

மணந்துளதால்." பரந்த-விரிந்துள்ள. விளை. சம்பா நெற்பயிர்களும், குறுவை நெற் பயிர்களும், மணக்கத்தை நெற்பயிர்களும் வேறு பல பயிர்களும் விளைந்து நிற்கும். வயல்-அயல்களில் மலர்ந்திருக்கும்; ஒருமை பன்மை மயக்கம், செய்ய பங்கய மாம்-செந்தாமரை மலர்களாகும்; ஒருமை பன்மை மயக்கம். பொங்கு-பொங்கி எழும். எரியில்-நெருப்பில். வரம்பில்வயல்களினுடைய வரப்புக்களில்; ஒருமை புன்மை மயக்கம். வளர்-வளர்ந்து நிற்கும், தேமாவின்-இனிய பழங்கள் பழுக்கும் தேமா மரங்களில் பழுத்த ஒருமை பன்மை மயக் கம். கனி-பழங்கள்; ஒருமை பன்மை மயக்கம். கிழிந்தமுதிர்ச்சியைப் பெற்றிருப்பதனால் வழிந்த மது-தேனாகிய, நறு-நறுமணம் கமழும். நெய்-புத்துருக்கு நெய்யை நிரந் தரம்-இடையீடு இல்லாமல் எப்பொழுதும். நீள்-நீளமான. இலை-அந்த மாமரங்களில் உள்ள இலைகளினுடைய: ஒருமை பன்மை மயக்கம். க், சந்தி. கடையால்-நுனிகளின். வழியினால். கடை: ஒருமை பன்மை மயக்கம். ஒழுகுதலால்ஒழுகி விழுவதனால்.நெடிது. நீண்ட காலமாக.அவ்வூர்-அந்தச் சிவத்தலமாகிய சீகாழியில் வளர்ந்து நிற்கும். மரங்களும்மாமரங்களும், ஆகுதி-ஆகுதியைப் பெய்து. வேட்கும்வேண்வியைப் புரியும். வேள்வி-யாகம். தகைய-தன்மையைப் பெற்றவை. என-என்று கூறுமாறு; இடைக்குறை மணந் துளது-அமைந்திருக்கின்றன; ஒருமை பன்மை மயக்கம். உளது: இடைக்குறை. ஆல்:ஈற்றசை நிலை. -