பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 பெரிய புராண விளக்கம்-1).

பிறகு வரும் 8-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு:

அந்தச் சீகாழி மாநகரம் மேலைச் சமுத்திரத்தில் நெருப்பைப் போன்ற கிரணங்களை வீசும் சூரியன் விழுந்து அத்தமனம் ஆனபிறகு வந்த விரிந்துள்ள இரவு நேரத்தில் வெண்மை நிறத்தைப் பெற்ற சந்திரன் ஒவ்வொரு பூம் பொழிலிலும் புகுந்து வெளிப்படும் சமயத்தில் செறிந்திருக் கும் பலவகை மலர்களினிடம் அடைந்து தேனில் படிந்து மகரந்தப் பொடிகளை அளைந்து கொண்டு பழகி செவ்வந்தி மாலை நேரம் வானத்தில் எழும் சிவந்த பிரகாசத்தை வீசும் சந்திரனைப் போல விளங்கும். பாடல் வருமாறு:

' வேலையழற் கதிர்படிந்த வியன்கங்குல்

வெண்மதியம் சோலைதொறும் நுழைந்துபுறப் படும்பொழுது

- துதைந்தமலர்ம் பாலணைந்து மதுத்தோய்ந்து தாதளைந்து - பயின்றங் தி

மாலை எழும் செவ்வொளிய மதியம்போல்

உதியுமால்.’’

வேலை.அந்தச் சீகாழி மாநகரம் மேலைச் சமுத்திரத் தில். அழல்-நெருப்பைப் போன்ற உவம ஆகுபெயர். கதிர் . கிரணங்களை விகம் சூரியன். படிந்த-விழுந்து அத்தமனம் ஆன பிறகு. வியன்-வந்த விரிந்துள்ள கங்குல்-இரவு நேரத் தில். வெண்-வெண்மையான நிலாவை வீசும். மதியம்சந்திரன். சோலை தொறும்-ஒவ்வொரு பூம்பொழிலிலும். நுழைந்து-புகுந்து. புறப்படும்-வெளியில் வரும். பொழுதுசமயத்தில். து ைதந்த-அந்தப் பொழில்களில் செறிந்துள்ள மலர்ப்பால்-பலவகை மலர்களிடம்: ஒருமை பன்மை மயக் சம். அந்த மலர்சளாவன:மகிழ மலர்,நந்தியாவட்டை மலர், வேங்கை மலர், சண்பக மலர், வாகை மலர், பூவரச மலர், நாவல் மலர் முதலியவை. அணைந்து-அடைந்து. மதுதேனில். தோய்ந்து-படிந்து. தாது.மகரந்தப் பொடிகளை,