பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் புராணம் J to

ஒருமை பன்மை மயக்கம். அளைந்து-அளைந்துகொண்டு, . பயின்று-பழகி. அந்திமாலை-செவ்வந்தி மாலை நேரம். எழும்-வானத்தில் எழும். செவ்வொளிய-சிவந்த பிரகா சத்தை வீசிய, மதியம் போல்-சந்திரனைப் போல. உதியும். விளங்கும். ஆல்: ஈற்றசை நிலை.

பிறகு வரும் 9-ஆம் பாடலின் கருத்து வருமாறு: 'விரும்புதற்குரிய அந்தத் திருத்தலத்தில் வாழும் வேதியர்களைப் போன்று, சிறந்து மணம் வீசும் தாமரை மலர்கள் கூட. தம் மென்மையான இதழ்களுடன் முப்புரி நூலாகிய பூணுாலைத் தன் மேல் கொண்டால் என்ன விளங்கி, துய்மை பொருந்திய மகரந்தப் பொடியை அணிந்து தேன் துளிகள் ததும்பித் துலங்கிட, இனிமை பொருந்த வண்டுகள் இசை பாடும் போது அத்துடன் பொருள் பொதிந்து பொருந்திய சாமவேத கீதம் முழங்குவது போல் காணும். பாடல் வருமாறு:

' காமர் திருப் பதியதன்கண் வேதியர்போல் கடிகமழும்:

தாமரையும் புல்லிதழும் தயங்கிய நூ லும்தாங்கித் தூமருநுண் துகள்அணிந்து துளிவருகண்

- ணிர்ததும்பித் தேமருமென் சுரும்பிசையால் செழுஞ்சாமம்

பாடுமால்.”

காமர்-விரும்புதற்குரிய. அழகிய திருப்பதியதன் கண் - சீகாழியில் உள்ள வேதியர்போல்-நாலு வேதமும் அறிந்த அந்தணர்களைப் போல்.கடி-மிக்க மணம். கமழும்-வீசுகின்ற தாமரையும்-தாமரை மலரும்: பொய்கைகளில் மலர்கின்ற செங்கமல மலர்கள் கூட. புல் இதழ்-மென்மையான இதழ் களை உடையனவாய், தூமரு-துய்மை பொருந்திய, நுண் துகள் அணிந்து-நுண்ணிய மகரந்தப் பொடிகளைக் கொண்டு. தயங்கிய நூல் தாங்கி-பூணுாலை மேலே பூண்டா லென விளங்கிட, துளிவரு-சிறு துளிகளாக வரும். கண் நீர்தேனாகிய நீர். ததும்பி-ததும்பிடத்:சந்தி, தேமரு-இனிமை.