பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 - பெரிய ಆTTST STತ5b-10

பொருந்திட சுரும்பு-வண்டு. இசையால்-ரீங்காரமாகிய சங்கீதத்தால். செழும் சாமம்-பொருள் வளம் பொதிந்த சாமகீதம். பாடும்-பாடும். ஆல்: ஈற்றசை நிலை. -

பின்பு வரும் 10-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

அந்தச் சீகாழியில் உயரமாக நிற்கும் மாடங்கள் தாங்கள் அணியும் நீளமான தங்கக் குழைகள் அசையுமாறு மலர் வேலை செய்யப் பெற்ற மேலாடையைப் பின் பக்கத். தில் தாழவிட்டு அக்கினி காரியம் வாய்ப்பாக அமைந்த நெருப்பை மூட்டிய யாகசாலைக் குண்டத்தைச் சுற்றி மெழுகுதல் உறுமாறு வெண்மையான சுண்ணாம்பை ஒழுகி நீளச் செய்யும் முழங்கும் வானத்தில் தவழும் மேகத்தைப் போன்ற கூந்தல்களையும் ஒளியை வீசுதலைச் செய்யும் வடக்குத் திசையிலுள்ள நட்சத்திரமாகிய அருந்ததியைப் போன்ற கற்பைப் பெற்ற இல்லற வாழ்க்கையை நடத்தும் உயர்குலத்திற் பிறந்த பெண்மணிகளினுடைய செல்வ வளமும் அழகு வளமும் பெற்று விளங்குபவைகளாக இருக்கும். பாடல் வருமாறு:

புனைவார்பொற் குழைஅசையப் பூந்தானை

பின்போக்கி வினைவாய்ந்த தழல்வேதி மெழுக்குறவெண்

- கதைஒழுக்கும் கணைவான முகிற்க.ந்தற் கதிர்செய்வட மீன்கற்பின் மனைவாழ்க்கைக் குலமகளிர் வளம்பொலிவ

- . மாடங்கள்."

இந்தப் பாடலில் விற்பூட்டுப் பொருள்கோள் அமைந் துள்ளது. மாடங்கள்-அந்தச் சீகாழியில் உயரமாக நிற்கும மாடங்கள். புனை-தாங்கள் அணிந்து கொள்ளும். வார்நீளமாக உள்ள. பொன்-தங்கத்தாற் செய்யப் பெற்ற. குழை-குழைகள்: ஒருமை பன்மை மயக்கம். அசைய-தங் கள் காதுகளில் அசைந்து அசைந்து ஆட, ப், சந்தி. ஆந்தானை-மலர் வேலை செய்யப் பெற்ற மேலாக்குக்களை: