பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் புராணம் 13."

ஒருமை பன்மை மயக்கம். பின் போக்கி-பின் பக்கத்தில் தாழவிட்டு. வினை- அக்கினி காரியம். வாய்ந்த-வாய்ப்பாக அமைந்த. தழல்-நெருப்பை மூட்டிய, வேதி-யாகசாலைக் குண்டத்தைச் சுற்றி. மெழுக்கு உற-கோமயத்தால் மெழு குதல் உறுமாறு. வெண்-வெண்மையான. சுதை-சுண் ணாம்பை, ஒழுக்கும்-ஒழுகி நீளுமாறு செய்யும். கனை முழங்கும். வான-வானத்தில் தவழும். முகில்-மேகத்தைப் போன்ற; உவம ஆகுபெயர். கூந்தல்-கூந்தல்களையும் ஒருமை பன்மை மயக்கம். கதிர் செய்-ஒளியை வீசுதலைச் செய்யும். வடமீன்-வடக்குத் திசையில் உள்ள நட்சத்திர மாகிய அருந்ததியைப் போன்ற உவம ஆகுபெயர். கற்பின்கற்பைப் பெற்ற, மனை வாழ்க்கை-இல்லற வாழ்க்கையை நடத்தும், க்: சந்தி, குலமகளிர்-உயர் குலத்தின் பிறந்த பெண்மணிகளினுடைய. வளம்-செல்வ வளமும் அழகு வளமும்; ஒருமை பன்மை மயக்கம். பொலிவ-விளங்கு பவைகளாக இருக்கும்.

அடுத்து வரும் 11-ஆம் பாடலின் உள்ளுறை வருமாறு: அந்தச் சீகாழியில் விளங்கும் அழகிய வீதிகளில் யாகத் தைச் செய்யும் சடங்காகிய அதை சிறுவர்களும் சிறுமிகளும் விளையாடல்களைச் செய்யும் ஒவ்வோர் இடத்திலும் புழுதி அடையுமாறு வகைப்படுத்தி அமைத்து வைத்து தங்கத் தால் செய்யப் பெற்ற அந்தச் சிறுவர்களும் சிறுமிகளும் தங்களுடைய இடுப்புக்களில் அணிந்திருக்கும் கிண் கிணி களாகிய சலங்கைகள் ஒலியை எழுப்ப மூன்று சக்கரங் களைப் பெற்ற அழகிய சிறிய தேராகிய நடை வண்டியில் அமர்ந்து செலுத்தி அந்தச் சிறு தேரினால் எழும்பிய புழுதி யில் குளிக்கும் வளரும் அந்தணச் சிறுவர்கள் நெருக்கமாக இருப்பவையாக விளங்கும். பாடல் வருமாறு:

வேள்விபுரி சடங்கதனை விளையாட்டுப் பண்ணை

தொறும் பூழியுற வகுத்தமைத்துப் பொன்புனைகிண் கிணி

ஒலிப்பு.