பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் புராணம் 139; " .

பிறகு வரும் 93-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: “ ‘புண்ணியச் செயல்களுக்கு முதல்வராக விளங்குபவரே, இடுப்பில் அணியும் சலங்கைகள் கோத்த அரை நாணோடு எழுந்தருளும் கண்களில் நிறைந்த சூரியனைப் போன்றவரே, அறுபத்து நான்கு கலைகளும் வளரும் சந்திரனைப் போலத் திகழ்பவரே அழகு பொருந்தி விளங்கும் பண்கள் நடக்கும் நடையைப்போலத் திகழ்பவரே, இளப்பருவத்தில் ஒரு மூன்று பிராயம் நடக்கும் போதே நீ எண்ணிய பரம்பொருளாகி நிலைத்து நின்றவராகிய தோணியப்பர் வழங்கிய திருவ ருளை நீ பெற்றாய்” என்று சீகாழியில் வாழும் மக்கள் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரைப் பாராட்டிப் பேசு வார்கள். பாடல் வருமாறு:

புண்ணிய முதலே,யுனைமணி அரைஞாணொடுபோதும். கண்ணிறை கதிரே, கலைவளர் மதியே, கவின்மேவும் பண்ணியல் கதியே. பருவம் தொருமூ வருடத்தே எண்ணிய பொருளாய் கின்றவர் அருள்பெற் றனை

என்பார்.""

புண்ணிய-புண்ணியச் செயல்களுக்கு: ஒருமை பன்மை மயக்கம். முதலே-முதல்வராக விளங்குபவரே. முதல்: திணை மயக்கம். புனை-இடுப்பில் அணியும். மணி-சலங்கைகள் கோத்த ஒருமை பன்மை மயக்கம். அரைஞாணொடு-அரை நாள் வடத்தோடு,போதும்-எழுந்தருளும். கண்-கண்களில்; ஒருமை பன்மை மயக்கம்.நிறை-நிறைந்த கதிரே-சூரியனைப் போன்றவரே; உவம ஆகு பெயர். கலை-அறுபத்து நான்கு கலைகள் ஒருமை பன்மை மயக்கம். வளர்-வளரும். மதியே. சந்திரனைப் போன்றவரே உவம ஆகுபெயர். கவின்-அழகு. மேவும்-பொருந்தி விளங்கும். பண்-பண்கள் : ஒருமை பன்மை மயக்கம். இயல் கதியே-நடக்கும் நடையைப் போலத் திகழ்பவரே உவம ஆகுபெயர். பருவமது ஒரு மூவருடத்துஇளம் பருவத்தில் ஒரு மூன்று பிராயம் நடக்கும் போதே. அது: பகுதிப் பொருள் விகுதி. ஏ. அசைநிலை. எண்ணிய-நீ எண்ணிய. பொருளாய்.பரம் பொருளாகி. நின்றவர்