பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

of 40 பெரிய புராண விளக்கம்-10

நிலைத்து நின்றவராகிய தோனியப்பர். அருள்-வழங்கிய திருவருளை.பெற்றனை-நீ பெற்றாய்.என் பார்-என்று சீகாழி

யில் வாழும் மக்கள் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரைப் பாராட்டிப் பேசுவார்கள்; ஒருமை பன்மை மயக்கம்.

பிறகு வரும் 94-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

'அந்தச் சீகாழியில் வாழும் மக்கள் என இத்தகைய பல பாராட்டு வார்த்தைகளைச் சொல்லி வேத மந்திரங்களாகிய வார்த்தைகளைக் கூறும் வேதியர்களும், மற்ற மக்களும் நின்று கொண்டு தோத்திரங்களைப் புரிந்து அந்தத் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாருடைய திருவடிகளைத் தங்களுடைய உயரமான தலைகளின் மேல் வைத்துத் தங்கள் கைகளைக் குவித்துக் கும்பிட்டு வரிசையாக நின்ற சமயத்தில் அந்த இடத்துக்குப் போய்ச் சேர்ந்த திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாருடைய தந்தையாராகிய சிவ பாத் இருதயர் தெய்வத் தன்மையைப் பெற்ற சிவஞானத்தை அடைந்த கன்றுக் குட்டியைப் போன்றவராகிய அந்தத் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரை முன்னால் சென்று தம்முடைய கைகளில் எடுத்துக் கொண்டு தம்முடைய பின் கழுத்தின் மேல் ஏற்றிக் கொண்டு மகிழ்ச்சியை மிகுதி யாக அடைந்து போக." பாடல் வருமாறு:

என்றினைய பலகூறி இருக்குமொழி அந்தணரும் ஏனை யோரும் கின்றுதுதி செய்தவர்தாள் நீள்முடிக்கண்

மேலெந்தி கிரந்த போது சென்றணைந்த தாதையார் சிவபாத

இருதயர்தாம் தெய்வ ஞானக் கன்றினைமுன் புக்கெடுத்துப் பியலின்மேற்

கொண்டுகளி கூர்ந்து செல்ல." இந்தப் பாடல் குளகம். என்று-அந்தச் சீகாழியில் வாழும் மக்கள் என, இணைய-இத்தகைய. பல-பல பாராட்டு வார்த்தைகளை கூறி-சொல்லி. இருக்கு மொழி