பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் புராணம் 141

வேத மந்திரங்களாகிய வார்த்தைகளைக் கூறும். மொழி ஒருமை பன்மை மயக்கம். அந்தணரும்-வேதியர்களும்: ஒருமை பன்மை மயக்கம். ஏனையோரும்-மற்ற மக்களும்; ஒருமை பன்மை மயக்கம். நின்று-திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாருக்கு முன்னால் நின்று கொண்டு, துதிசெய்துதோத்திரங்களைப் புரி ந் து. துதி : ஒருமை பன்மை மயக்கம். அவர்-அந்தத் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாருடைய. தாள் - திருவடிகளை ஒருமை பன்மை மயக்கம். நீள்-தங்களுடைய உயரமான முடிக்கண்மேல்தலைகளின் மேல்; ஒருமை பன்மை மயக்கம். ஏந்தி . வைத்துத் தங்களுடைய கைகளைக் குவித்து கும்பிட்டு. நிரந்த-வரிசையாக நின்று கொண்டிருந்த போதுசமயத்தில். சென்று-அந்த இடத்திற்குப் போய். அணைத்தசேர்ந்த. தாதையார்-திருஞான சம்பந்த மூர்த்தி நாயனா ருடைய தந்தையாரகிய, சிவபாத இருதயர்தாம்-சிவபாத, இருதயர். தாம் : அசை நிலை. தெய்வ-தெய்வத் தன்மை யைப் பெற்ற ஞான - சிவஞானத்தை அடைந்த. க், சந்தி, கன்றினை-கன்று குட்டியைப் போன்றவராகிய அந்தத் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரை உவம ஆகு பெயர். முன்-முன்னால். புக்கு-சென்று. எடுத்து தம்முடைய கைகளில எடுத்துக் கொண்டு. ப் : சந்தி. பியல்மேல்-தம் முடைய பிடரியின் மேல். கொண்டு-ஏற்றிக் கொண்டு. களி. ஆனந்தத்தை கூர்ந்து-மிகுதியாக அடைந்து, செல்ல-போக.

பிறகு வரும் 95-ஆம் பாடலின் உள்ளுறை வருமாறு:

'அவ்வாறு சிவபாத இருதயர் தம்முடைய புதல்வராகிய - திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரைத் தம்முடைய பிடரியின் மேல் ஏற்றிக் கொண்டு சென்ற அந்தச் சமயத்தில் பெருமையைப் பெற்று விளங்கும் வேதியர்களினுடைய கூட்டத்தோடு மிகுதியாகக் கூடிய பிரமபுரீசருடைய திருத் தொண்டர்களின் கூட்டம் தம்முடைய பக்கத்தில் சுற்றிக் கொண்டு தங்களுடைய இடுப்புக்களில் உடுத்திருந்த ஆடை களோடு, அங்கவஸ்திரங்களை ஒப்பற்ற ஆகாயத்தில் வீசி.