பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் புராணம் 143

சிவானந்தம் என்னும் நீர். ப்:சந்தி. பெருக் காறுவெள்ளத்தைக் கொண்ட நதி. போத-ஒட அதன் மீதுஅந்த நதியின் மேல். பொங்கும்-பொங்கி எழும். காமர்அழகு மருவிய. நுரை-நுரைகளைக் கொண்ட ஒருமை பன் ைம மயக்கம். க் சந்தி. குமிழி-கொப்புளங்கள்; ஒருமை பன்மை மயக்கம். எழுந்து-மேலே எழுந்து, இழிவன போல்-இறங்குபவற்றைப் போல. விளங்கு-திகழும். பெரும்பெருமையைப் பெற்று விளங்கும். காட்சித்தாக-தோற்றப் பொலிவைப் பெற்றதாக.

பிறகு வரும் 96-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: நெடுங்காலமாகப் புகழோடு விளங்கும் அழகிய கழுமலமாகிய சீகாழியில் வாழும் பூதேவர்களாகிய அந்தணர் களினுடைய மாளிகைகளுக்கு மேல் நெருக்கமாக நின்று கொண்டு அந்த இடத்தில் பக்கத்தில் கூடியிருக்கும் மடப்பத் தைப் பெற்ற பெண்மணிகள் மங்கலகரமான பெருமையைப் பெற்று விளங்கும் வார்த்தைகளால் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாருக்கு வாழ்த்துக்களைக் கூறி நல்ல வாசனை கமழும் இதழ்கள் மிகுதியாக அமைந்த நறுமணம் கமழும் பலவகையாகிய மலர்களையும் பொற் சுண்ணத்தையும் வெண்மையான நெற்பொரிகளோடும், சிகரங்கள் அமைந்த பெருமையைப் பெற்ற ஒரு மலையின் மேல் மின்னல் களினுடைய கூட்டங்கள் பக்கங்களில் அசைந்து செல்லும் கொள்கையை உடையதாகத் துாவியபடியே நின்று கொண்

டிருப்பார்கள். பாடல் வருமாறு:

  • டுேதிருக் கழுமலத்து கிலத்தேவர்

மாளிகைமேல் நெருங்கி அங்கண் மாடுகிறை மடவார்கள் மங்கலமா

மொழிகளால் வாழ்த்தி வாசத் தோடுமலி நறுமலரும் சுண்ணமும்வெண் பொரியினொடும் துரவி கிற்பார் கோடுபயில் குலவரைமேல் மின்குலங்கள்

புடைபெயரும் கொள்கைத் தாக."