பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

置岳独 பெரிய புரான விளக்கம்.10

காக விருப்பத்தோடு அந்த நாயனார் அந்தத் திருக்கோலக் காவிற்கு எழுந்தருளினார். பாடல் வருமாறு:

" காதலுடன் அணைந்துதிருக் கழுமலத்துக்

கலந்துவிற் றிருந்த தங்கள் தாதையா ரையும்வெளியே தாங்கரிய

மெய்ஞ்ஞானம் தம்பால் வந்து போதமுலை சுரந்தளித்த புண்ணியத்தா யாரையும்முன் வணங்கிப் போற்றி மேதகைய அருள்பெற்றுத் திருக்கோலக்

காஇறைஞ்ச விருப்பிற் சென்றார்."

காதலுடன்-அந்தத் திருஞான சம்பந்த மூர்த்தி நாய னார் அவ்வாறு விருப்பத்தோடு, அணைந்து-தோணியப் பருடைய ஆலயத்தை அடைந்து. திரு-அழகிய; செல்வர்கள் வாழும் எனலும் ஆம் திணை மயக்கம். க்: சந்தி. கழும லத்து-கழுமலமாகிய சீகாழியில்.க்சந்தி.கலந்து-சேர்ந்து.iற் றிருந்த-அமர்ந்திருந்த, தங்கள்-தங்களுடைய என்றது திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் தம்மையும் வேறு திருத்தொண்டர்களையும் சேர்த்துக் கூறியது. தாதையா ரையும்-தந்தையாரைப் போன்றவராகிய தோனியப்பரை யும்; உவம ஆகுபெயர். வெளி-திருக்கோயிலுக்கு வெளியில். ஏ. அசைநிலை. தாங்கரிய-தம்முடைய திருவுள்ளத்தில் தாங்குவதற்கு அருமையாக உள்ள. மெய்-உண்மையான. ஞ்: சந்தி. ஞானம்.சிவஞானத்தை. தம்பால்-தம்மிடம்; என்றது திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரிடம் என் பதை. வந்து-எழுந்தருளி வந்து. போத-ஞானமாக விளங் கும் முலை-தம்முடைய கொங்கைகளிலிருந்து ஒரு பொற் கிண்ணத்தில் வைத்துக் சிவஞானத்தைக் குழைத்துப் பாலை; ஒருமை பன்மை மயக்கம். சுரந்து-கறந்து. அளித்தவழங்கியருளிய புண்ணிய-தம்முடைய புண்ணியச் செயல் களின் பயனாக விளங்கும்; ஒருமை பன்மை மயக்கம். த்: சந்தி. தாயாரையும்- அன்னை யாரைப் போன்றவராகிய பெரிய நாயகியாரையும்; உவம ஆகுபெயர். முன்-அவர்