பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் புராணம் $53

களுடைய சந்நிதிகளில், ஒருமை பன்மை மயக்கம். வணங்கிஅந்த இருவரையும் பணிந்து. ப்: சந்தி, போற்றி-வாழ்த்தி விட்டு. மேதகைய-மேன்மையையும் தகுதியையும் பெற்ற. அருள்-அந்தத் தோணியப்பர் வழங்கிய திருவருளை.பெற்றுபெற்றுக் கொண்டு, த், சந்தி. திருக்கோலக்கா-திருக்கோலக் காவுக்கு எழுந்தருளி. இறைஞ்ச-அந்தச் சிவத்தலத்தில் திருக் கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் சத்தபுரீசரை வணங்குவதற்காக. விருப்பில்-விருப்பத்தோடு; உருபு மயக் கம். சென்றார்.அந்த நாயனார் அந்தத் திருக்கோலக்கா விற்கு எழுந்தருளினார்.

திருக்கோலக்கா: இது சோழ நாட்டில் உள்ள சிவத் தலம். இங்கே கோயில் கொண்டிருப்பவர் சத்தபுரீசர். அம் பிகை ஒசை கொடுத்த நாயகி. இந்தத் தலம் இந்தக் காலத் தில் திருத்தாளமுடையார் கோயில் என வழங்கும். இது சீகாழிக்குத் தெற்குத் திசையில் அரை மைல் தூரத்தில் உள் கது. சீகாழிக்கும் திருக்கோலக்காவுக்கும் இடையில் கழுமல வாய்க்கால் என்ற கால்வாய் ஓடுகிறது. இது திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் பொற்றாளத்தைப் பெற்ற தலம்.

இந்தத் தலத்தைப் பற்றித் தக்கராகப் பண்ணில் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் பாடியருளிய ஒரு

பாசுரம் வருமாறு: -

' மடையில் வாளை பாய மாதரார்

குடையும் பொய்கைக் கோலக் காவுளான் சடையும் பிறையும் சாம்பற் பூச்சும்கிளி உடையும் கொண்ட உருவம் என்கொலோ.'

சுந்தர மூர்த்தி நாயனார் தக்கேசிப் பண்ணில் பாடி

யருளிய ஒரு பாசுரத்தில் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்

இந்தத் தலத்தில் பொற்றாளத்தைப் பெற்ற செய்தியைப் புலப்படுத்தும் பாசுரம் வருமாறு: