பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் புராணம் 159

கையதனால் ஒத்தறுத்துப் பாடுதலும்

கண்டருளிக் கருணை கூர்ந்த

செய்யசடை வானவர்தம் அஞ்செழுத்தும்

எழுதியகற் செம்பொற் றாளம்

ஐயரவர் திருவருளால் எடுத்தபா

உலுக்கிசைந்த அளவால் ஒத்த

வையமெலாம் உய்யவரு மறைச்சிறுவர் கைத்தலத்து வந்த தன்றே."

கையதனால்-அந்தத் திருஞான சம்பந்த மூர்த்தி நாய ானசர் தம்முடைய கைகளால்; ஒருமை பன்மை மயக்கம். அது: பகுதிப் பொருள் விகுதி. ஒத்து-தாளத்தை, அறுத்துவரையறை செய்து தட்டிக் கொண்டு. ப்: சந்தி. பாடுதலும்சத்தபுரீசரைப் பாடியருளியவுடன், கண்டருளி-அதனைப் பார்த்தருளி. க், சந்தி. கருணை-தம்முடைய கருணையை. கூர்ந்த-மிகுதியாக வழங்கியருளிய செய்ய-சிவந்த சடைசடாபாரத்தைத் தம்முடைய தலையின் மேற் பெற்ற. வானவர்தம்-மகாதேவராகிய சத்த்புரீசருக்கு உரிய. தம்: ஆசைநிலை. அஞ்சு-ஐந்து எழுத்தும்-ந, ம, சி, வா, ய என்னும் ஐந்து எழுத்துக்களும் அடங்கிய பஞ்சாட்சரத்தை. எழுத்து: ஒருமை பன்மை மயக்கம். எழுதிய-வரைந்துள்ள. நல்-நல்ல. செம்-சிவப்பாக இருக்கும். பொன்-தங்கத்தால் செய்யப் பெற்ற தாளம்-ஒரு தாளம். ஐயர்-ஐயராகிய, ஐயர்-தகப்பனாரைப் போன்றவர்; தலைவர், அழகைப் பெற்றவர். அவர்-அந்தச் சத்தபுரீசர். திருவருளால்-வழங்கிய திருவருளினால், எடுத்த அந்த நாயனார் பாடத் தொடங் கிய பாடலுக்கு-பாசுரத்தோடு; உருபு மயக்கம். இசைந்தபொருந்திய அளவால்-அளவோடு; உருபு மயக்கம். ஒத்ததட்ட வையம்-இந்தப் பூ மண்டலத்தில் வாழும் மக்கள்: இட ஆகுபெயர். எலாம்-எல்லாரும்; இடைக்குறை. உய்யஉஜ்ஜீவனத்தை அடையும் வண்ணம். வரு-சீகாழியில் திருவவதாரம் செய்தருளி வரும். மறைச் சிவர்-வேதியச் சிறுவராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாருடைய.