பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 . பெரிய புராண விளக்கம்-10,

மறை: திணை மயக்கம். கைத் தலத்து-திருக்கரங்களாகிய

இடத்தில்; ஒருமை பன்மை மயக்கம். வந்தது-வந்து

சேர்ந்தது. அன்று, ஏ. இரண்டும் ஈற்றசை நிலைகள்.

பின்பு உள்ள 104-ஆம் பாடவின் உள்ளுறை வருமாறு:

சீகாழியில் திருவவதாரம் செய்தருளிவரும் பெருமை யையும் தகுதியையும் பெற்றவராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாருடைய திருக்கரங்களில் வந்து சேர்ந்த அழகிய பொற்றாளமாகிய இசைக் கருவியைப் பார்த்து அந்தத் தாளத்தை அந்த நாயனார் தம்முடைய அழகிய தலையின் மேல் வைத்துக் கொண்டருளித் தம்முடைய திருவுள்ளம் மகிழ்ச்சியடையத் தம்முடைய இனிமையாகிய வார்த்தைகளை அருளிச் செய்யும் திருவாயில், ச, ரி, க, ம, ப, த, நிச் என்னும் ஏழு சுவரங்கள் அமைந்த சங்கீதமும் தழைப்பை அடைந்து ஓங்கி நிற்க இனிய பண் அமைந்த சொற்சவை, பொருட்சுவை என்னும் வளப்பம் அமைந் திருக்கும் செந்தமிழ் மொழியில் அமைந்த ஒரு திருப்பதி கத்தை அந்தச் இத்தபுரீசரை அடையுமாறு பாடியருளித். தொங்கும் மாணிக்கங்களால் செய்யப் பெற்ற குழைகளைத் தம்முடைய செவிகளில் அணிந்தவராகிய சத்தபுரீசருடைய சந்நிதியில் நின்று கொண்டு, அந்தத் திருப்பதிகத்திற்குத் தக்க அழகி இறுதிப் பாசுரத்தில் தம்முடைய திருநாமத் ைஇ. வைத்துப் பாடி அந்தப் பாசுரத்தைச் சத்தபுரீசருக்கு அணிந்து விட்டு அந்த நாயனார் அந்தத் திருக்கோயிலில் நின்று கொண்டிருந்தார். பாடல் வருமாறு:

' காழிவரும் பெருந்தகையார் கையில்வரும்

திருத்தாளக் கருவி கண்டு வாழியதம் திருமுடிமேற் கொண்டருளி

மனம்களிப்பு மதுர வாயில் ஏழிசையும் தழைத்தோங்க இன்னிசைவண்

டமிழ்ப்பதிகம் எய்தப் பாடித் தாழுமணிக் குழையார்முன் தக்கதிருக் கடைக்காப்புச் சாத்தி கின்றார்."