பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் புராணம் 163

அளவின்-அளவினுடைய. உண்மை-உண்மையை நோக்கிபார்த்து. த், சந்தி. தும்புரு-தும்புருவும். நாரதர்-நாரத முனிவரும். முதல் ஆம்-முதலாக இருக்கும். சுருதி-சுருதியோடு பொருந்துமாறு வேதங்களினுடைய’ எனலும் ஆம்; ஒருமை பன்மை மயக்கம். இசை-பாடும் சங்கீதம். த்.சந்தி. துறை. என்னும் துறையில் உள்ளோர். வல்லவர்களாக இருப்ப வர்கள்; ஒருமை பன்மை மயக்கம். துதித்து-தோத்திரங் களைக் கூறிச் சத்தபுரீசரைத் துதித்து விட்டு. மண்மேல்தரையின் மேல். வம்பு-நறுமணம். அலர்-விரியும்; கமழும், மா.பெருமையைப் பெற்று விளங்கும். மழை-கற்பக மரத்தி லிருந்து தாங்கள் கொய்து கொண்டு வந்த மலர்களை மாரியைப் போல; உவமஆகுபெயர். பொழிந்தார்-சொரிந் தார்கள்; ஒருமை பன்மை மயக்கம். மறை-இருக்கு வேதம், யஜுர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம் என்னும் நான்கு வேதங்களும் ஒருமை பன்மை மயக்கம். வாழ-நல்ல வாழ்வைப் பெறுமாறு. வந்தருளும்-சீகாழியில் திருவவ தாரம் செய்து வந்தருளும். மதலையாரும்-ஆண் குழந்தை யாராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரும். தம்-தம் முடைய. பெருமான்-தலைவனாகிய பிரமபுரீசன். பிரமபுரி. கோழி. அருள்-வழங்கிய திருவருளை. போற்றி-வாழ்த்தி விட்டு. மீண்டருளி-திருக்கோலக்காவிலிருந்து புறப்பட்டுத் திரும்பி வந்தருளி. ச்:சந்தி, சண்பை நகர்-சண்பை நகரமாகிய .சீகாழி என்னும் பெரிய சிவத்தலத்திற்கு. சார-போய்ச் சேரு மாறு, ச்: சந்தி. செல்வார்-எழுந்தருள்பவரானார்.

பிறகு வரும் 106-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு:

அந்தத் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் தம் முடைய செந்தாமரை மலர்களைப் போன்ற கைகளில் அழகிய பொற்றாளத்தோடு நடந்து எழுந்தருளும் சமயத் தில் தங்களுடைய் குடும்பத்தில் உள்ள தம்முடைய தந்தை யாராகிய சிவபாத இ ரு த ய ர் தம்முடைய புதல் வராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் தம்முடைய கால்களால் நடந்து போவதைச் சகிக்காமல் தம்முடைய