பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#62 பெரிய புராண விளக்கம்-10

வலம்கொள் பாடல் வல்ல வாய்மையார் உலம்கொள் வினை போய் ஓங்கி வாழ்வரே."

அடுத்து வரும் 105-ஆம் பாடலின் உள்ளுறை வருமாறு:

தேவலோகத்தில் வாழும் தேவர்கள் வியப்பை அடையு மாறு ஓங்கி எழுந்த இனிய ஓசையினுடைய அளவின் உண் மையைப் பார்த்துத் தும்புரு, நாரத முனிவர் முதலாக இருக் கும் சுருதியோடு பொருந்துமாறு பாடும் சங்கீதத் துறையில் வல்லவர்களாக இருப்பவர்கள் சத்தபுரீசரைத் தோத்திரங் களைக் கூறித் துதித்துவிட்டு, தரையின்மேல் நறுமணம் கமழும் கற்பக மரத்திலிருந்து தாங்கள் கொய்து கொண்டு வந்த மலர்களை பெருமையைப் பெற்று விளங்கும் மாரியைப் போலச் சொரிந்தார்கள் இருக்கு வேதம், யஜுர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம் என்னும் நான்கு வேதங் களும் நல்ல வாழ்வைப் பெறும் வண்ணம் சீகாழியில் திருவவ தாரம் செய்தருளும் ஆண் குழந்தையாராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரும் தம்முடைய தலைவனாகிய பிரமபுரீசன் வழங்கிய திருவருளை வாழ்த்திவிட்டுத் திருக் கோலக்காவிலிருந்து புறப்பட்டுத் திரும்பி வந்தருளிச் சண்பை நகரமாகிய சீகாழி மாநகரத்திற்குப் போய்ச் சேரு மாறு எழுந்தருள்பவரானார். பாடல் வருமாறு:

உம்பருல கதிசயிப்ப ஓங்கியகா

தத்தளவின் உண்மை நோக்கித் தும்புருகா ரத்ர்முதலாம் சுருதிஇசைத்

துறையுள்ளோர் துதித்து மண்மேல் வம்பலர்மா மழைபொழிந்தார் மறைவாழ

வந்தருளும் மதலை யாரும் தம்பெருமான் அருள் போற்றி மீண்டருளிச் சண்பைநகர் சாரச் செல்வார்.'

உம்பர் உலகு-தேவலோகத்தில் வாழும் தேவர்கள்: இட ஆகுபெயர். அதிசயிப்ப-வியப்பை அடையுமாறு. இங்கிய-இங்கி எழுந்த நாதத்து-இனிய ஓசையினுடைய.