பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் புராணம் 1.65

கொண்டு செல்ல. அங்கு-அந்த லடத்தில், அவர்தம்-அந்த சிவபாத இருதயராகிய தம்முடைய தந்தையாரின், தம்: அசைநிலை. தோளின்மிசை-தோள்களின்மேல்; ஒருமை மன்மை மயக்கம். எழுந்தருளி-ஏறிக்கொண்டு எழுந்தருளி. அணைந்தார்-தம்மைப் புகலாக அடைந்த பக்தர்களை: ஒருமை பன்மை மயக்கம். சூழ்ந்து-வலமாக வந்து. அமரர்தேவர்கள் ஒருமை பன்மை மயக்கம். ஏத்தும்-துதிக்கும். திங்கள்-சந்திரனை. அணி-புனைந்துள்ள. மணி-மாணிக்கங் களைப் பதித்திருக்கும்; ஒருமை பன்மை மயக்கம். மாடமாடங்கள் உயரமாக நிற்கும்: ஒருமை பன்மை மயக்கம். த்: சந்தி, திரு-அழகிய, த், சந்தி, தோணிபுர-தோணி புரமாகிய சீகாழியின் உள்ள பிரமபுரீசர் ஆலயத்தில் இருக் கும் கட்டு மலையின்மேல் விளங்கும் தோணி அமைந்திருக் கும். த் சந்தி, தோணி-தோணி அமைந்திருக்கும். ச் சந்தி. சிகர-முடியைப் பெற்ற கோபுரத்தைப் பெற்ற. க் சந்தி. கோயில்-திருக்கோயிலுக்கு உள்ளே.

பின்பு உள்ள 107-ஆம் பாடலின் உள்ளுறை வருமாறு: அந்தத் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் அழகு பெருகி விளங்கும் பெருமையைப் பெற்றுத் திகழும் தோணி யப்பருடைய திருக்கோயிலைச் சுற்றி வலமாக வந்தருளி அந்த அழகிய தோணியப்பருடைய சந்நிதியில் நின்று கொண்டு அந்தத் தோணியப்பர் வழங்கிய திருவருளால் தம்முடைய திருவுள்ளத்தில் பெருகி எழுந்த ஒரு திருப்பதி கத்தை எட்டுச் சீர்களை ஒரு கணக்காக அமைத்து அந்தக் கட்டளைக்குள் ஒன்றை விருப்பத்தைப் பெற்ற தங்கத் தைப் பதித்திருக்கும் சீகாழியில் பிரமபுரீசர் திருக்கோயிலில் உள்ள கட்டுமலையின் மேல் விளங்கும் அழகிய தோணியில் அமர்ந்திருந்தவராகிய தோணியப்பரைப் பாடியருளியதற் காக உண்டாகிய விருப்பம் பொருத்தமாக அமைய அந்தத் தோனியப்பர் வழங்கிய திருவருளை அந்த நாயனார் பெற். றுக் கொண்டு அந்தத் தோணியப்பரை வாழ்த்தி விட்டு, 'பூவார் கொன்றை" என்னும் தொடக்கத்தைக் கொண்ட