பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 பெரிய புராண விளக்கம்-10

ஒரு திருப்பதிகத்தைத் தொடங்கியருளினார். பாடல் வருமாறு:

திருப்பெருகு பெருங்கோயில் சூழவலம்

கொண்டருளித் திருமுன் கின்றே அருட்பெருகு திருப்பதிகம் எட்டொருகட்

டளையாக்கி அவற்றுள் ஒன்று விருப்புறுபொற் றிருத்தோணி வீற்றிருந்தார்

தமைப்பாட மேவு காதல் பொருத்தம்உற அருள்ஆெற்றுப் போற்றி எடுத்

தருளினார். பூவார் கொன்றை. '

திரு-அந்தத் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் அழகு.ப்: சந்தி. பெருகு-பெருகி விளங்கும். பெரும்-பெருமை யைப் பெற்றுத் திகழும். கோயில்-தோணியப்பர் எழுந்தருளி யிருக்கும் திருக்கோயிலை. சூழ-சுற்றி, வலம் கொண்டருளிவலமாக வந்தருளி. த், சந்தி. திரு-அழகிய முன்-அந்தத் தோனியப்பருடைய சந்நிதியில், நின்று-நின்று கொண்டு. ஏ: அசைநிலை. அருள்-அந்தத் தோணியப்பர் வழங்கிய திருவரு ளால். பெருகு-தம்முடைய திருவுள்ளத்தில் பெருகி எழுந்த. திருப்பதிகம்-ஒரு திருப்பதிகத்தை. எட்டு-எட்டுச் சீர்களை: ஆகுபெயர். ஒரு கட்டளை ஆக்கி-ஒரு கணக்காக அமைத்து. அவற்றுள்- அந்தக் கட்டளைக்குள். ஒன்று-ஒரு கட்ட ளையை, விருப்புறு-தம்முடைய விருப்பத்தைப் பெற்ற. பொன்-தங்கத்தைப் பதித்திருக்கும். திரு-அழகிய, த், சந்தி. தோணி-சீகாழியில் உள்ள பிரமபுரீசருடைய ஆல்யத்தில் இருக்கும் கட்டுமலையின் மேல் விளங்கும் தோணியில். வீற்றிருந்தார் தமை-அமர்ந்திருந்தவராகிய தோனியப் பரை. தமை இடைக்குறை. தம்: அசைநிலை. ப்: சந்தி: பாட-பாடி யருளுவதற்காக, மேவு-தம்முடைய திருவுள்ளத் தில் உண்டாகிய காதல்-விருப்பம். பொருத்தம் உறவ பொருத்தமாக அமைய. அருள்-அந்தத் தோனியப்பர் வழங் கிய திருவருளை. பெற்று-அந்த நாயனார் பெற்றுக் கொண்டு. ப்: சந்தி, போற்றி-அந்தத் தோனியப்பரை