பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 பெரிய புராண விளக்கம்-10

பிறகு மற்றொரு பிறப்பையும் பெற்றவர்களும், துவிஜர் களும் ஆகிய அந்தணர்களும். பிறப்பு: ஒருமை பன்மை மயக் கம். அல்லா-அந்தணர்கள் அல்லாத ஏனையோரும், மற்றச் சாதிகளில் பிறந்த rத்திரியர்களும், வைசியர்களும், வேளாளர்களும், பள்ளர்களும், பள்ளிகளும், பறையர்களும், பறைச்சிகளும், வலையர்களும், வலைச்சியர்களும், மரமேறி களும், அவர்களுடைய மனைவிமார்களும், சக்கிலியர்களும் ஆகியவர்களும். பொங்கு-மகிழ்ச்சி பொங்கி எழும் திருத் தொண்டர்களும்-பிரமபுரீசருடைய திருத்தொண்டர்களும். அதிசயித்து-வியப்பை அ ைட ந் து. க்: சந்தி. கு ழ ம் கொண்டு-கூட்டமாகக் கூடிக் கொண்டு. புகவியார் தம்-புகலியாகிய சீகாழியில் வாழும் அந்தணர்களுடைய: ஒருமை பன்மை மயக்கம். தம்: அசைநிலை.சிங்க இள ஏற்றின் டால்-இளைய ஆண் சிங்கக் குட்டியைப் போன்றவராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரிடம்; உவம ஆகுபெயர். வந்து அணைந்து-வந்து சேர்ந்து. கழல்-அந்த நாயனாரு டைய வெற்றிக் கழலைப் பூண்டு கொண்டு விளங் கும் திருவடிகளை; ஆகு பெயர். பணியும்-வணங்கும். சிறப் பின்-சிறந்த நிலையில். மிக்கார்-மிகுதியாக விளங்கினார்கள் : ஒருமை பன்மை மயக்கம்.

திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாருக்குச் சிங்கம்

உவமை: “பரசமய கோளரி வந்தான்., 'கவுணியர் தம் போரேற்றை.’, 'புகலி வந்த பூசுரர் சிங்கமும்.', 'தனிக் கானம் சின்னமெல்லாம் பர சம ய கோளரிவந்தா னென்றுரத.” என்று சேக்கிழாரும், 'தென்னாட்டமண் அட்ட சிங்கத்தினை.’’, 'புகலித் தாளரிக்கும் அரியான் அருள் பெற்ற பரசமய கோளேரி.', 'முத்தமிழின் செஞ்சொற் பொருள் பயந்த சிங்கத்தை.”, “பரசமய வென்றி அரி.',

'செழுமலயத் தமிழ் சேசரி.', 'பரமகுரு நாதன்மிகு பரசமய கோளரியே.', 'காழி முதல்வன் கவுணியதம் போரேறு.' என்று நம்பியாண்டார் நம்பியும் பாடியருளியவற்றைக் காண்க.