பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் புராணம் 】7盟洲

பிறகு வரும் 111-ஆம் பாடலின் உள்ளுறை வருமாறு: 'அந்தத் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் தம். முடைய திருமாளிகைக்கு வந்த திருத்தொண்டர்களுக்கும், மிகுதியாக வந்த செல்வச் செழிப்பைப் பெற்ற வேதியர் களுக்கும், வேறாக உள்ள கடித்திரியர்களுக்கும், வைசியர் களுக்கும், வேளாளர்களுக்கும், பிற சாதியிற் பிறந்தவர்களுக் கும் அவர்களுடைய திருவுள்ளங்கள் மகிழ்ச்சியை அடையு. மாறு அந்த நாயனார் தம்முடைய முகம் மலர்ச்சியை அடைந்து திருவமுது முதலான உணவு வகைகளை சிறப்பைப் பெற்ற செயலை அவர்கள் தங்கள் தங்களுடைய அளவுகளுக் கேற்ற வகையில விருப்பத்தை அடையும் தகுதியான பான் மையால் தம்முடைய கடமையைப் புரியும் உண்மையாகிய சீகாழி என்னும் பழமையான சிவத்தலம் அடியேங்களுடைய தலைவனாகிய கைலாசபதி எழுந்தருளியிருக்கும் சிவலோகம் என்று கூறுமாறு திகழ்ந்துள்ள அந்தச் சீகாழி மாநகரத்தை எந்த உலகங்களில் வாழ்பவர்களும் துதித்துப் பாராட்டும் காலத்தில். பாடல் வருமாறு:

  • வந்ததிருத் தொண்டர்க்கும் மல்குசெழு மறையவர்க்கும் மற்று ளோர்க்கும் சிங்தைமகிழ் வுறமலர்ந்து திருவழுது முதலான சிறப்பின் செய்கை தந்தம்அண வினில்விரும்பும் தகைமையினால்

கடனாற்றும் சண்பை முதுனர் எந்தைபிரான் சிவலோகம் என விளங்கி எவ்வுலகும் ஏத்தும் நாளில், ' இந்தப் பாடல் குளகம். வந்த அந்தத் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் தம்முடைய திருமாளிகைக்கு வந்த, திருத்தொண்டர்க்கும்-திருத்தொண்டர்களுக்கும்: ஒருமை பன்மை மயக்கம். மல்கு-மிகுதியாக வந்த செழுசெல்வச் செழிப்பைப் பெற்ற. மறையவர்க்கும்-வேதியர் களுக்கும்; ஒருமை பன்மை மயக்கம். மற்றுளோர்க்கும்வேறாக உள்ள கடித்திரியர்களுக்கும், வைசியர்களுக்கும்.