பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

。翌& S பெரிய புராண விளக்கம்-10

பெருமறை ஓசை மல்கப்

பெருந்திருக் கோயில் எய்தி

அருமறைப் பொருளா னாரைப்

பணிந்தணி நற்சங் கத்தின்

தருமுறை நெறியக் கோயில்

சார்ந்தமை அருளிச் செய்தார்.'

திரு-தலைச்சங்காட்டி ல் வாழும் அழகிய திரு-செல்வத் தைப் படைதத' எ லுைப ஆம். மறையோ கன்-வேதியர்கள். சூழந்து-சுற்றியிருந்து. சிந்தையில்-தங்களுடைய திருவுள்ளங் களில், ஒருமை பன்மை மயக்கம். மகிழ்ச்சி-ஆனந்தம். பொங்க-பொங்கி எழ. ப்:சந்தி. பெரு.பெருமையைப் பெற்று விளங்கும். மறை-இருச்கு வேதம், யஜுர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம் என்னும் நான்கு வேதங்களினு டைய, ஒருமை பன்மை மயககம். ஒசை-இனிய கானம். பல்க-நிறைந்திருக்க, ப், சந்தி. பெரும்-பெருமையையும். திரு-அழகையும் பெற்ற, க்: சந்தி. கோயில்-நற்றுணையப்பர் எழுந்தருளியிருக்கும் திருக்கோயிலை. எய்தி-அடைந்து. அரு-பொருள் தெரிந்து கொள்வதற்கு அருமையாக உள்ள. பறை-வேதங்களினுடைய ஒருமை பன்மை மயக்கம், ப்:சந்தி. பொருள் ஆனாரை-அர்த்தமாக விளங்குபவராகிய அந்த நற்றுனையப்பரை. ப்: சந்தி. பணிந்து-வணங்கி. அணிஅழகைப் பெற்ற, நல்-நல்லவர்கள் கூடிய வினையாலணை யும் பெயர். சங்கத்தின்-சங்கத்தில். தரு-வழங்கும். முறை நெறி-முறையான வழியில். அக்கோயில்-அந்தத் திருக் கோயிலை. சார்ந்தமை-அடைந்த பான்மையை. அருளிச் செய்தார்-அந்தத் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் திருவாய் மலர்ந்தருளிச் செய்தார். -

பிறகு வரும் 1:0-ஆம் கலியின் உள்ளுறை வருமாறு: ‘ஆலகாலவிடத்தின் கறையை அணிந்திருக்கும் திருக் கழுத்தைப் பெற்றவராகிய நற்றுணையப்பர் எழுந்தருளியி ருக்கும் திருக்கோயிலில் விருப்பத்தோடு அந்த நற்றுணையப் .பரை வணங்கி ஒரு திருப்பதிகத்தைப் பாடியருளி வேதி