பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 92 பெரிய புராண விளக்கம்-10

இந்தத் தலத்தைப் பற்றி இந்தளப் பண்ணில் திருஞானசம் பந்த மூர்த்தி நாயனார் பாடியருளிய ஒரு பாசுரம் வருமாறு: நித்தலும் நியமம் செய்து நீலமலர் தூவிச் சித்தம் ஒன்றவல் லார்க்கருளும் சிவன் கோயில் மத்த யானையின் கோடும்வண் பீலியும் வாரித் தத்து நீர்ப்பொன்னி சாகரம் மேவு சாய்க்காடே." இந்தத் தலத்தைப் பற்றித் திருநாவுக்கரசு நாயனார். பாடியருளிய ஒரு திருநேரிசை வருமாறு:

"தோடுவாம் மலர்கள் துரவித்

தொழுதெழு மார்க்கண் டேயன் வீடுநாள் அணுகிற் றென்று

மெய்கொள் வான் வந்த சாலன் பாடுதான் செல்லும் அஞ்சிப்

பாதமே சரண மென்னச் சாடினார் காலன் மாளச்

சாய்க்காடு மேவி னாரே...'

இந்தத் தலத்தைப் பற்றி அந்த நாயனார் பாடியருளின ஒரு திருத்தாண்டகம் வருமாறு:

"வானத் திளமதியும் பாம்பும் தன்னில்

வளர்சடைமேவ் ஆதரிப்ப வைத்தார் போலும். தேனைத் திளைத்துண்டு வண்டு பாடும்

தில்லை நடமாடும் தேவர் போலும் ஞானத்தின் ஒண்சுடராய் நின்றார் போலும்

நன்மையும் தீமையும் ஆனார் போலும் தேனொத் தடியார்க் கினியார் போலும்

திருச்சாய்க்காட் டினிதுறையும் செல்வர் தாமே." இந்தத் தலத்தைப் பற்றிய மற்றொரு பாசுரம் வருமாறு: * நீநாளும் நன்னெஞ்சே நினைகண்டாய் யாரறிவார்

சாநாளும் வாழ்நாளும் சாய்க்காட்டெம் பெருமாற்கே பூநாளும் தலைசுமப்பப் புகழ்நாமம் செவிகேட்ப நாநாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே.'

ξ. "