பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் புராணம் #9 I

தெண்டிரை தேங்கி ஒதம்

சென்றடி வீழும் காலைத் தொண்டிரைத் தண்டர் கோனைத்

தொழுதடி வணங்கி எங்கும் வண்டுகள் மதுக்கள் மாந்தும்

வலம்புரத் தடிகள் தம மைக் கொண்டுநற் கீதம் பாடக்

குழகர்தாம் இருந்த வாறே.' இந்தத் தலத்தைப் பற்றி அந்த நாயனார் பாடியருளிய ஒரு திருத்தாண்டகம் வருமாறு:

'மண்ளைந்த மணிவண்ணர் தாமும் மற்றை

மறையவனும் வானவரும் சூழ நின்று கண்மவிந்த திருநெற்றி உடையார் ஒற்றைக் கதநாகம் கையுடையார் காணி ரன்றே பண்மலிந்த மொழியவரும் யானும் எல்லாம்

பணிந்திறைஞ்சித் தம்முடைய பின்பின் செல்ல மண்மலிந்த வயல்புடைசூழ் மாட வீதி

வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே...' இந்தத் தலத்தைப் பற்றிக் காந்தாரப் பண்ணில் சுந்தர மூர்த்தி நாயனார் பாடியருளிய ஒரு பாசுரம் வருமாறு:

' எனக்கினித் திளைத்தனைப் புகலிடம் அறிந்தேன்

பனைக்கனி பழம்படும் பரவையின் கரைமேல் எனக்கினி யவன் தமர்க் கினியவன் எழுமையும் மனக்கினி யவன்றன திடம்வலம புரமே."

திருச்சாய்க்காடு : இது சோழ நாட்டில் காவிரியாற்றின் கரையில் உள்ள சிவத்தலம். இங்கே கோயில் கொண்டிருப் பவர் சாயாவனேசுவரர். அம்பிகை குயிலினும் நன்மொழி அம்மை. இது சாயாவனம் எனவும் வழங்கும். இது .சீகாழிக்குத் தென் கிழக்குத் திசையில் 9-மைல் தூரத்தில் உள்ளது. இது உபமன யு முனிவர் வழிபட்ட தலம். காசிக்கு நிகராகக் கூறும் ஆறு தலங்களில் இதுவும் ஒன்று.