பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 பெரிய புராண விளக்கம்.19

தொடக்கத்தைப் பெற்ற திருப்பதிகத்கால் அந்த வலம்புரி நாதேசுவரரைத் துதித்து விட்டு. ப்:சந்தி. போந்து-மேலே எழுந்தருளி. நிறை-நிரம்பிய புனல்-நீர்வளத்தைப் பெற்ற. திருச்சாய்க்காடு-அழகிய சாய்க்காட்டுக்கு. தொழுதற்குதிருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் எழுந்தருளிச் சாயா வனேசுவரரை வ ண ங் கு வ த ற் கு. நினைந்து-எண்ணி. செல்வார்-அந்தச் சாய்க்காட்டுக்கு எழுந்தருளுவாரானார். திருவலம்புரம்: இது சோழநாட்டில் உள்ள சிவத்தலம். இங்கே கோயில் கொண்டிருப்பவர் வலம்புரிநாதேசுவரர். அம்பிகை வருவகிர்க்கண் அம்மை. இதற்கு இக்காலத்தில் வழங்கும் பெயர் பெரும்பள்ளம் என்பது. இது திருவெண் காட்டிலிருந்து தென்கிழக்குத் திசையில் கால்மைல் தூரத்தில் உள்ளது. இது திருபால் வழிபட்டு வலம்புரிச் சங்கைப் பெற்ற தலம். திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரோடு திருநாவுக்கரசு நாயனார் ஒவ்வொரு சிவத்தலத்திற்கும் எழுந்தருளி அந்தத் தலங்களில் எழுந்தருளியிருக்கும் சிவ .ேருமான்களைத் தரிசித்து விட்டு எழுந்தருளிய சமயத்தில் வலம்புரிநாதேசுவரர் திருநாவுக்கரசு நாயனாரைத் தாமே இந்தத் தலத்துக்கு வருவித்துத் தம்முடைய திவ்ய தரிச ைத்தை வழங்கியருளிய தலம் இது. இந்தத் தலத்லைப் பற்றிப் பழம்பஞ்சுரப் பண்ணில் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் பாடியருளிய ஒரு பாசுரம் வருமாறு: 'கொடியுடை மும்மதில் ஊடுருவக்

குனிவெஞ் சிலைதாங்கி இடிபடஎய்த அமரர் பிரான் அடியார்

இசைந் தேத்தத் துடியிடை யாளை ஒர்பாகமாகத்

துதைந்தார் இடம்போலும் வடிவுடை மேதி வயல்படியும்

வலம்புர நன்னகரே.'

இந்தத தலத்தைப் பற்றித் திருநாவுககரசு நாயனார் பாடிய ஒரு திருநேரிசை வருமாறு: