பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 பெரிய புராண விளக்கம்-10

பொன்-தங்கத்தைப் போன்ற உவம ஆகுபெயர். இதழி-இதழ்களைப் பெற்ற : ஒருமை பன்மை மயக்கம். க் : சந்தி, கொன்றை-கொன்றை மலர் மாலையும்; ஆகு பெயர். வன்னி-வன்னி பத்திரமும். பத்திரம்-இலை. புனல். கங்கையாற்றின் நீரும். இள-இளம்பருவத்தைக் கொண்ட. மதியம்-பிறைச்சந்திரனும். நீடு-நெடுங்காலமாகத் தங்கி யுள்ள. சென்னியர்-தலையைப் பெற்றவராகிய வேதாரணி யேசுவரர். திருவெண்காட்டு-திருக்கோயில் கொண்டு எழுந் தருளியிருக்கும் திருவெண்காட்டில். த் : சந்தி. திருத் தொண்டர்-வாழும் திருத்தொண்டர்கள்: ஒருமை பன்மை மயக்கம். எதிர்-அந்தத் திருஞான சம்பந்த மூர்த்தி நாய னாருக்கு எதிரில், ஏ : அசைநிலை. சென்று-போய். அங்குஅந்த இடத்தில். இன்ன-இத்தகைய. தன்மையர்கள்மனப்பான்மையை உடையவர்கள். ஆனார்-ஆனார்கள் : ஒருமை பன்மை மயக்கம். என-என்று கூற இடைக்குறை. ஒணா-முடியாத இடைக்குறை. மகிழ்ச்சி-பேரானந்தம். பொங்க-தங்களுடைய திருவுள்ளங்களில் பொங்கி எழ. மன்னு-நிலைபெற்று விளங்கும். சீர்-சீர்த்தியைக் கொண்ட ச்:சந்தி. சண்பை-சண்பையாகிய சீகாழியை, ஆளும்-ஆட்சி புரிந்தருளும். மன்னரை-அரசராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரை க்:சந்தி கொண்டு.அழைத்துக் கொண்டு. புக்கார்-வேதாரணியேசுவரருடைய திருக் கோயிலுக்குள் நுழைதந்ார்கள்: ஒருமை பன்மை மயக்கம். -

அடுத்து உள்ள 125-ஆம் செய்யுளின் கருத்து வருமாறு:

'முத்தமிழ் விரகராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாய னாரும் எல்லாத் தேவர்களுக்கும முதல் தேவராகிய வேதா ரணியேசுவரருடைய திருக்கோயிலுக்கு முன்னால் உயரமாக நிற்கும் கோபுரத்துக்கு முன்னால் தம்முடைய திருவுள்ளத் தில் உண்டாகிய மகிழ்ச்சியோடும் எழுந்தருளித் தரையில் விழுந்து வேதாரணியேசுவரரை வணங்கி விட்டுப் பிறகு தரையிலிருந்து எழுந்து நின்று கொண்டு திருக்கோயிலுக்கு உள்ளே நுழைந்து வேதாரணியேசுவரருடைய பக்தர்களாக