பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208 பெரிய புராண விளக்கம்-10:

தைப் பற்றிப் பியந்தைக் காந்தாரப் பண்ணில் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் பாடியருளிய ஒரு பாசுரம். வருமாறு:

' வரை வந் தெடுத்த வலிவாள் அரக்கன்

முடி பத்தம் இற்று நெரிய

உரை வந்த பொன்னின் உருவந்த மேனி உமைபங்கன் எங்கள் அரனுTர்

வரை வந்த சந்தொ டகிலுந்தி வந்து மிளிர்கின்ற பெ.:ன்னி வடபால்

திரை வந்து வந்து செறிதேறல் ஆடு

திருமுல்லை வாயில் இதுவே.'

பிறகு உள்ள 128-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு:

"அந்தத் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார், சீகாழி யில் உள்ள பிரமபுரீசருடைய ஆலயத்தில் விளங்கும் கட்டு மலையின்மேல் இருக்கும் தோனியில் அமர்ந்திருந்தவராகிய தோணியப்பரை வணங்கிவிட்டு அந்தத் தோனியப்பருடைய சந்நிதியில் நின்று கொண்டு பரிசுத்தமாக உள்ள உரையாணி யாக விளங்கும் ஒரு திருப்பதிகத்தைப் பாடியருளி திருவரு ளால் தாம் பெற்றிருக்கும் பெருமையைப் பெற்று விளங்கும் நல்ல வாழ்வு மிகுதியான சிறப்போடு அமைய ஆகாயத்தள வும் உயரமாக நிற்கும் மாடங்கள் சிறந்து ஓங்கித் திகழும். அழகிய சிவத்தலமாகிய அந்தச் சீகாழியில் சிவந்த சடா பாரத்தைத் தம்முடைய தலையின்மேற் பெற்றவராகிய தோனியப்பரை ஒவ்வொரு தினமும் வாழ்த்தி வணங்கிய விருப்பத்தில் மிக்க சிறப்போடு அந்த நாயனார் விளங்: கினார். பாடல் வருமாறு: -

" தோணிவிற் றிருந்தார் தம்மைத்

தொழுதுமுன் கின்று தூய ஆணியாம் பதிகம் பாடி

அருட்பெரு வாழ்வு கூரச்