பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் புராணம் 209

சேணுயர் மாடம் ஓங்கும்

திருப்பதி அதனிற் செய்ய வேணியார் தம்மை நாளும்

போற்றிய விருப்பின் மிக்கார். ' தோணி-அந்தத் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் சீகாழியில் உள்ள பிரமபுரீசருடைய ஆலயத்தில் விளங்கும் கட்டுமலையின்மேல் இருக்கும் தோணியில். வீற்றிருந்தார் தம்மை-அமர்ந்திருந்தவராகிய தோனியப்பரை. தம் : அசை நிலை. த்:சந்தி. தொழுது-வணங்கி விட்டு. முன்-அந்தத் தோனியப்பருடைய சந்நிதியில். நின்று-நின்று கொண்டு. து ய-பரிசுத்தமாக உள்ள ஆணியாம்-மற்றத் திருப்பதிகங் களாகிய பொன்னின் மாற்றை உரைத்துப் பார்க்கும் உரை யாணியாக விளங்கும். பதிகம்-ஒரு திருப்பதிகத்தை. பாடிஅந்த நாயனார் பாடியருளி. அருள்-திருவருளால், பெரு வாழ்வு-தாம் பெற்றிருக்கும் பெருமையைப் பெற்று விளங்கும் நல்ல வாழ்வு. கூர-மிகுதியான சிறப்போடு அமைய, ச்:சந்தி. சேண்-ஆகாயத்தளவும், உயர்-உயரமாக நிற்கும். மாடம்-மாடங்கள் ஒருமை பன்மை மயக்கம். ஒங்கும்.சிறந்து ஓங்கித் திகழும். திருப்பதி-அழகிய சிவத்தல மாகிய, அதனில்-அந்தச் சீகாழியில். செய்ய-சிவந்த, வேனி யார்தம்மை-சடாபாரத்தைத் தம்முடைய தலையின்மேற் பெற்றவராகிய தோனியப்பரை. தம்: அசைநிலை. நாளும்ஒவ்வொரு தினமும், போற்றிய-வாழ்த்தி வணங்கிய. விருப்பில்-விருப்பத்தில். மிக்கார்-மிக்க சிறப்போடு அந்த நாயனார் விளங்கினார்.

திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் திருத்தோணி புரத்தைப் பற்றிப் பழந்தக்கராகப் பண்ணில் பாடியருளிய ஒரு பாசுரம் வருமாறு:

வன்டரங்கப் புனற்கமல மதுமாந்திப் பெடையினொடும் ஒண்டரங்க இசைபாடும் அளியரசே ஒளிமதியத் துண்டரங்கப் பூண்மார்பர் திருத்தோணி புரத்துறையும் பண்டரங்கர்க் கென்நிலைமை பரிந்தொருகாற்

{#& .” பெ-10-14 ராயே