பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210 பெரிய புராண விளக்கம்.19

இந்தத் தலத்தைப் பற்றி அந்த நாயனார் சாதாரிப் பண்ணில் பாடியருளிய ஒரு திருவிராகப் பாசுரம் வருமாறு: * சங்கமரு முன்கைமட மாதையொரு பாலுடன் விரும்பி அங்கமுடன் மேலுற அணிந்துபிணி தீரஅருள் செய்யும் எங்கள் பெரு மானிடமெனத் தகுமுனைக் கடலின்

- முத்தம் துங்கமணி இப்பிகள் கரைக்குவரு தோணிபுர மாமே.”* அந்த நாயனார் அந்தத் தலத்தைப் பற்றிப் பழம் பஞ், சுரப் பண்ணில் பாடியருளிய மற்றொரு பாசுரம் வருமாறு:

மெய்யார் வில்லியைக் காய்ந்து சாதற்

காரிகை மாட்டருளி அரும்பமர் கொங்கை யோர்மால் மகிழ்ந்த

அற்புதம் செப்பரிதால் பெரும்பக லேவந்தென் பெண்மை கொண்டு

பேரித்தவர் சேர்ந்த இடம் சுரும்பமர் சோலைகள் சூழ்ந்த செம்மைத்

தோணிபுரம் தானே.'

இந்தத் தலத்தைப் பற்றித் திருநாவுக்கரசு நாயனார். பாடியருளிய ஒரு திருக்குறுந்தொகை வருமாறு:

"மாதி யன்று மனைக்கிரு என்றங்கால் நீதி தான் சொல் நீனைக் காரெனும் சோதி யார்தரு தோணி புரவர்க்குத் தாதி ஆவன் நான் என்னுமென் தையலே."

பிறகு உள்ள 129-ஆம் பாடலின் உள்ளுறை வருமாறு:

அந்தத் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் அவ்வாறு: சீகாழியில் தங்கிக் கொண்டிருக்கும் அந்தக் காலத்தில் கிழக்குத் திசையில் இருக்கும் மயேந்திரப்பள்ளியும் நறுமணம் கமழும் மலர்கள் மலர்ந்திருக்கும் பலவகையான மரங்கள் வளர்ந்து நிற்கும் பூஞ்சோலையைப் பெற்ற திருக்கோவூரும், திருமுல்லைவாயிலும் அடங்கத் தாம் எழுந்தருளிய சிவத்