பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் புராணம் &瑟直

தான-அந்தத் திருநீலகண்டத்து யாழ்ப்பெரும்பான நாயனார் சுவரஸ்தானங்களினுடைய, ஒருமை பன்மை மயக்கம். நிலை-நிலைக்கு ஏற்றபடி. க்சந்தி. கோல்-தம் முடைய யாழில் உள்ள தண்டினை. வடித்து-அழகிய வடிவ முற அமைத்து. ப்:சந்தி. படி-பலவேறு ஸ்தானங்களி னுடைய ஒருமை பன்மை மயக்கம் முறைமை-முறை மையைப் பெற்ற த்:சந்தி தகுதியினால்-தகுதியோடு; உருபு மயக்கம். ஆன-அமைந்த. இசை-சங்கீதத்தை. ஆராய்வுற்றுஆராய்ச்சியைச் செய்து அம்-அழகிய கணர்தம்-கண்களைப் பெற்றவராகிய பிரமபுரீசருக்கு ஏற்ற. கணர்: இடைக்குறை. கண்:ஒருமை பன்மை மயக்கம. தம்: அசைநிலை. பாணி யினை தாளத்தை. மானம்-பெருமையைப் பெற்றவரும்: வினையாலணையும் பெயர். மானம்-அளவு எனலும் ஆம். உற-முறைமைத் திருமணம் செய்து கொள்ளப் பெற்றவரும்; வினையாலணையும் பெயர், ப்:சந்தி. பாடினியாருடன்விறலியரும் ஆகிய மதங்கசூளாமணியாரோடு. பாடினிபாணனுடைய மனைவி. விறலி-சத்துவம் பட ஆடிப் பாடு பவள். பாடி-தாமும் பாடல்களைப் பாடி. தாமும்' என்றது திருநீலகண்டத்து யாழ்ப்பெரும்பாண நாயனாரை, வாசிக்கதம்முடைய யாழை மீட்டி வாசிக்க. ஞானபோனகர்-கேட் டருளிச் சீகாழியில் உள்ள பிரமபுரீசருடைய ஆலயத்தில் இருக்கும் கட்டுமலையின்மேல் விளங்கும் பெரிய நாயகியார் தம்முடைய கொங்கைகளிலிருந்து கறந்து ஒரு பொற் கிண்ணத்தில் வைத்துச் சிவஞானத்தைக் குழைத்து வழங்கிய சிவஞானமாகிய விருந்தை நுகர்ந்தருளியவராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார். மகிழ்ந்தார்-மகிழ்ச்சியை அடைந்தார். நான்மறையோர்-இருக்கு வேதம், யஜுர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம் என்னும் நான்கு வேதங்களையும் முறையாக அத்தியயனம் செய்து நிறை வேற்றியவர்களும், சீகாழியில் வாழ்பவர்களுமாகிய வேதியர்கள்: ஒருமை பன்மை மயக்கம். மறை : ஒருமை பன்மை மயக்கம். அதிசயித்தார்-வியப்பை அடைந்தார்கள்; ஒருமை பன்மை மயக்கம்.