பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 பெரிய புராண விளக்கம்-10

பிறகு உள்ள 136-ஆம் பாடலின் உள்ளுறை வருமாறு: 'அவ்வாறு திருநீலகண்டத்து யாழ்ப்பெரும்பாண நாய னார் தம்முடைய யாழை மீட்டி வாசித்துப் பாடும் போது அந்த யாழிலிருந்து எழும் னிய நாதத்தோடு அந்தப் பெரும் பாணருடைய இசைப் பாடலும், அவருடைய தர்மபத்தினி யாராகிய மதங்கசூளாமணியாருடைய தொண்டையினால் பாடும் இசைப் பாடல்களும் ஒன்றாகச் சேர்ந்து சீகாழியில் உள்ள பிரமபுரீசருடைய ஆலயத்தில் இருக்கும் கட்டு மலையின்மேல் விளங்கும் அழகிய தோணியில் வீற்றிருப் பவராகிய தோனியப்பருக்குப் பக்கத்தைச் சென்று சேரும். பெருமையை தொங்கும் இரண்டு சிறகுகளைப் பெற்ற பருந்து, கருடன், கழுகு, காக்கை, கொக்கு, நாரை, மைனாக்குருவி, கிளி, மரங்கொத்திப்பறவை, மீன்கொத்திப் பறவை, சிட்டுக்குருவி, குருவி, செம்போத்து, தூக்கனாங் குருவி முதலிய பறவைகள் படிந்துள்ள ஒப்பற்ற ஆகாயத்தில் நின்று கொண்டு சரி,க,ம, ப, த, நிச, என்னும் ஏழு சுவரங் களைப் பெற்ற சங்கீதத்தைப் பற்றிய சாத்திரத்தில் தேர்ச்சி பெற்றவர்களாகிய கந்தருவர்களும், வித்தியாதரர்களும் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாருடைய புகழை எடுத்துப் பாடினார்கள். பாடல் வருமாறு:

யாழில் எழும் ஒசையுடன் இருவர்மிடற் றிசைஒன்றி

வாழிதிருத் தோணியுளார் மருங்கனையும்

- மாட்சியினைத் தாமும் இரு சிறைப்பறவை படிந்ததனி விசும்படைகின் றேழிசை நூற் கந்தருவர் விஞ்சையரும் எடுத் . திசைத்தார்.' யாழில்-அவ்வாறு அந்தத் திருநீலகண்டத்து யாழ்ப் பெரும்பாண நாயனார் தம்முடைய யாழை மீட்டி வாசித்துப் பாடும்போது உருபு மயக்கம். எழும்-அந்த யாழிலிருந்து எழும். ஒசையுடன்-இனிய நாதத்தோடு. இருவர்-அந்தப் பெரும்பாணர், அவருடைய தர்மபத்தினி யாராகிய மதங்கசூளாமணியார் ஆகிய இருவர்களும் பாடும்.