பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 பெரிய புராண விளக்கம்-19

தனக்கு ஒப்பாக வேறு எந்த நகரமும் இல்லாதி திருத்தோணி புரம், பூந்தராய், சிரபுரம் நகரங்களை நினைக்கும் போது முன்னால் நினைவுக்கு வரும் புறவம், சண்பை நகர், வளர்ந்து வரும் காழி, கொச்சை வயம், புகழப் பெறும் அழகிய கழுமலம் என்று ஆகும் பன்னிரண்டு அழகிய பெயர்களை உடையது. பாடல் வருமாறு:

பிரமபுரம், வேணுபுரம், புகலிபெரு வெங்குரு,நீர்ப் பொருவில் திருத் தோணிபுரம், பூந்தராய், சிரபுரம்முனி வருபுறவம், சண் பைங்கர், வளர்காழி

கொச்சைவயம், பரவுதிருக் கழுமலமாம் பன்னிரண்டு - திருப்பெயர்த்தால்.” பிரமபுரம்-அந்தச் சீகாழி, பிரமபுரம். வேணுபுரம், புகலி பெரு-பிரமபுரம், வேணுபுரம், புகலி,பெருமையைப் பெற்று விளங்கும். வெங்குரு-வெங்குரு. நீர்-நீர்வளத்தைப் பெற்ற. ப்: சந்தி. பொரு-தனக்கு ஒப்பாக இல்-வேறு எந்த நகரமும் இல்லாத கடைக்குறை. திரு-அழகிய.த்:சந்தி. தோணிபுரம், பூந்தராய்,சிரபுரம் முனிவரு-தோணிபுரம்,பூந்தராய்,சிரபுரம், நகரங்களை தினைக்கும் போது முன்னால் நினைவுக்கு வரும். புறவம், சண்டை நகர் வளர்-புறவம், சண்பை நகர், வளர்ந்து வரும். காழி, கொச்சைவயம் பரவு-காழி, கொச்சைவயம் புகழப்பெறும்.திரு-அழகிய.க்: சந்தி.கழுமலம் ஆம்-கழுமலம் என்று ஆகும். பன்னிரண்டு திரு-பன்னிரண்டு அழகிய, ப்: சந்தி. பெயர்த்து-பெயர்களை உடையது. பெயர்: ஒருமை பன்மை மயக்கம். ஆல்: ஈற்றசை நிலை.

பிறகு வரும் 15-ஆம் பாடலின் கருத்து வருமாறு: அந்தச் சீகாழி என்னும் சிவத்தலத்தில் வேதியர் களுடைய குடும்பங்களுக்கு முதன்மைப் பதவியை வகிப் பவர் ஒரு குற்றமும் இல்லாத இருக்கு வேதம், யஜூர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம் என்னும் நான்கு வேதங்களையும் முறையாக அத்தியயனம் செய்து நிறை.