பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் புராணம் 19

வேற்றிக் கற்றுக் கொண்ட நல்ல குணங்களைப் பெற்ற வேதியர்களில் கவுண்டின்ய கோத்திரம் விளக்கத்தை அடையுமாறு யாவரும் புகழ்ந்து பாராட்டும் சைவசமய வழியில் திருவவதாரம் செய்தவர்; சிவபாத இருதயர் என இந்த உலகத்தில் வாழும் மக்கள் நல்வாழ்வு பெறும் வண் ணம் தவத்தைப் புரிந்த இயல்பைப் பெற்றவர் அந்தச் சீகாழியில் இருப்பவர் ஆயினார். பாடல் வருமாறு:

" அப்பதியின் அந்தணர்தம் குடிமுதல்வர்; ஆசில்மறை கைப்படுத்த சீலத்துக் கவுணியர்கோத் -

திரம்விளங்கச் செப்பும்நெறி வழிவந்தார்; சிவபாத இருதயர் என் றிப்புவிவா ழத்தவம்செய் இயல்பினார்

உளரானார்.”

அப்பதியின் அந்தச் சீகாழி என்னும் சிவத்தலத்தில் அந்தணர் தம்-வேதியர்களுடைய ஒரு மை பன்மை மயக்கம். தம்: அசை நிலை. குடி-குடும்பங்களுக்கு; ஒருமை பன்மை மயக்கம். முதல்வர்-மு. த ன் ைம ப் பதவியை வ கி ப் பவ ர். ஆசு-ஒரு குற்றமும். இல். இல்லாத கடைக்குறை. மறை-இருக்கு வேதம், யஜூர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம் எனனும் நான்கு வேதங்களையும்; ஒருமை பன்மை மயக்கம். கைப் படுத்தமுறையாக அத்தியயனம் செய்து கற்றுக் கொண்டு நிறை வேற்றிய, சீலத்து-நல்ல குணங்களைப் பெற்ற ஒருமை பன்மை மயக்கம். க்சந்தி. கவுணியர் கோத்திரம்-கவுண் டின்ய கோத்திரம். விளங்க-விளக்கத்தை அடையுமாறு. ச்சந்தி. செப்பும் யாவரும் புகழ்ந்து பாராட்டும்.நெறிவழி. சைவசமய வழியில். வந்தார்-திருவவதாரம் செய்தருளிய வர். சிவபாத இருதயர் என்று-சிவபாத இருதயர் எனது கூறும் திருநாமத்தைப் பெற்றவர். இப்புவி-இந்த உலகத்தில் வாழும் மக்கள்; இட ஆகுபெயர் வாழ-நல்ல வாழ்வைப் பெறும் வண்ணம். த், சந்தி. தவம்-தவத்தை. செய்-புரிந்தத்