பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் புராணம் 25惠

' வரமதே கொளா வுரம தேசெயும், புரமெரித்தவன்

பிரமநற்புரத் தரனனாமமே பரவுலார்கள் சீர், விரவு நீள் புவியே.'

பின்பு வரும் 140-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு:

'அந்தச் சிறுவராகிய வேதியர்களினுடைய கன்றுக்குட் டியைப் போன்றவராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாய னார் பாடியருளி வழங்கிய திருப்பதிகத்தில் அமைந்த சங் கீதத்தைத் தம்முடைய யாழில் வழிப்படி அமைக்கும் திரு நீலகண்டத்து யாழ்ப்பெரும்பாண நாயனார் பிறகும். "தேவரீர் பாடி அருள் புரியும் பொருள் தெரிவதற்கு அருமை யாக உள்ள திருப்பதிகத்தை மீட்டிப் பாடும் பாடல்களை வாசிக்கும் யாழில் வைத்து அடியேன் தேவரீரைப் பிரிதல் இல்லாமல் வணங்கும் பாக்கியத்தைப் பெற வேண்டும்’ என்று கூறி விட்டு அந்தத் திருஞான சம்பந்த மூர்த்தி நாய னாரை வணங்கினார். பாடல் வருமாறு:

சிறியமறைக் கன்றளித்த திருப்பதிக இசையாழின் நெறியிலிடும் பெரும்பாணர் பின்னும்நீர்

- - அருள்செய்யும் அறிவரிய திருப்பதிக இசையாழில் இட்டடியேன் பிறிவின்றிச் சேவிக்கப் பெறவேண்டும்

எனத்தொழுதார்." சிறிய-சிறியவராகிய, வினையாலணையும் பெயர். மறை-வேதியர்களினுடைய திணை மயக்கம். க்சந்தி. கன்றுகன்றுக் குட்டியைப் போன்றவராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார்; உவம ஆகுபெயர். அளித்த-பாடியருளி வழங்கிய, திருப்பதிக-திருப்பதிகத்தில் அமைந்த, இசை-சங் கீதத்தை. யாழின் தம்முடைய யாழில். நெறியில்-வழிப்படி. இடும்-அமைக்கும். பெரும்பானர்-திருநீலகண்டத்து யாழ்ப் பெரும்பாண நாயனார். பின்னும்-பிறகும். நீர்-அந்தத் திரு ஞான சம்பந்த மூர்த்தி நாயனாரைப் பார்த்து, தேவரீர்.” அருள் செய்யும்-பாடி அருள் புரியும். அறிவரிய-பொருள்