பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 2 பெரிய புராண விளக்கம்-10

தெரிந்து கொள்வதற்கு அருமையாக உள்ள.திருப்பதிக-திருப் பதிக்த்தை இசை.மீட்டிப் பாடும் பாடல்களை வாசிக்கும்: ஒருமை பன்மை மயக்கம், யாழில்-அடியேனுடைய யாழில். இட்டு அடியேன்.-வைத்து அடியேன். பிறிவு-தேவரீரைப் பிரிதல். 'றி செய்யுளில் எதுகையை நோக்கி வல்லின உயிர் மெய்யெழுத்து ஆயிற்று. இன்றி-இல்லாமல், ச். சந்தி. சேவிக்க-வணங்கும் பாக்கியத்தை. ப்:சந்தி. பெற வேண்டும்அடியேன் அடைய வேண்டும். என-என்று கூறிவிட்டு: இடைக்குறை. த், சந்தி. தொழுதார்-அந்தத் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரை அந்தப் பெரும்பாணர் வணங்கினார்.

பின்பு வரும் 141-ஆம் பாடலின் உள்ளுறை வருமாறு: "அந்தத் திருநீலகண்டத்து யாழ்ப்பெரும்பாண நாய னார் வேண்டிக் கொண்ட வேண்டுகோளுக்கு ஆளுடைய பி ள் ைள யா ரா கி ய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் தம்முடைய திருவுள்ளத்தில் மகிழ்ச்சியை அடைந்து சம்மதித்தருள அந்தச் சம்மதத்தைப் பெற்ற வராகிய அந்தப் பெரும்பாணர், "அடியேங்களுடைய தலைவராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் வழங் கிய திருவருள் இதுதான்' என்று எண்ணி அதை விரும்பிச் செய்யுட் சொற்கள் அமைந்த செந்தமிழ் மொழியில் உள்ள மாலையாகிய திருப்பதிகத்தில் உள்ள சங்கீதப் பாடல்களைச் சுருதியோடு பொருந்தி வாசிக்கும் தம்முடைய யாழில் முறைப்படி அந்தத் திருப்பதிகத்தை அமைத்து அன்றைத் தினத்தைப் போல என்றைக்கும் அந்தத் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரை விட்டுப் பிரியாத நட்புடன் சீகாழியில் தங்கிக் கொண்டிருந்தார். பாடல் வருமாறு: " மற்றதற்குப் பிள்ளையார் மனம்மகிழ்வுற் றிசைக்தருளப் பெற்றவர்தாம், நம்பிரான் அருளிதுவே" எனப்பேணிக் சொற்றமிழ்மா லையின் இசைகள் சுருதியாழ்

o - m . முறைதொடுத்தே அற்றைகாட் போல்என்றும் அகலாகண் புடன்அமர்ந்தார்.'