பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் புராணம் 333

மற்று: அசைநிலை. அதற்கு-அந்தத் திருநீலகண்டத்து யாழ்ப்பெரும்பாண நாயனார் தம்மிடம் வேண்டிக் கொண்ட அந்த வேண்டுகோளுக்கு. ப்: சந்தி. பிள்ளையார்ஆளுடைய பிள்ளையாராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார். மனம்-தம்முடைய திருவுள்ளத்தில். மகிழ்வுற்றுமகிழ்ச்சியை அடைந்து, இசைந்தருள சம்மதித்தருள, ப்: சந்தி. பெற்றவர்தாம்-அந்தச் சம்மதத்தைப் பெற்ற வராகிய அந்தப் பெரும்பாணர். தாம்: அசைநிலை. நம்அடியேங்களுடைய. இது திருநீலகண்டத்து யாழ்ப்பெரும் பாண நாயனார் தம்மையும் பிறதொண்டர்களையும் சேர்த் துக் கூறியது. பிரான்-தலைவராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார்; ஒருமை பன்மை மயக்கம். அருள்வழங்கிய திருவருள். இதுவே-இதுதான். என-என்று எண்ணி; இ ைட க் கு ைற. ப்: சந்தி, பேணி. அந்தத் திருவருளை விரும்பி. ச்: சந்தி. சொல்-செய்யுளுக்குரிய சொற்கள் அமைந்த, ஒருமை பன்மை மயக்கம். தமிழ்செந்தமிழ் மொழியில் உள்ள. மாலையின்-மாலையாகிய திருப்பதிகத்தில் உள்ள. இசைகள்-சங்கீதப் பாடல்களை. கருதி. சுருதியோடு பொருந்தியிருக்கும். யாழ்-தம்முடைய யாழில். முறை-முறைப்படி, தொடுத்து-அந்தத் திருப்பதி கத்தை அமைத்து. ஏ. அசைநிலை. அற்றை நாட்போல்அன்றைத் தினத்தைப் போல. என்றும். என்றைக்கும். அகலாஅந்தத் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரை விட்டுப் பிரியாத நண்புடன்-கேண்மையோடு. அமர்ந்தார்-சீகாழி வில் தங்கிக் கொண்டிருந்தார். -

அடுத்து வரும் 142-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: "சிரபுரமாகிய சீகாழியில் தங்கிக் கொண்டிருந்தருளும் திருஞான சம்பந்த முர்த்தி நாயனார் பக்தர்கள் புகழும் அழகிய தில்லையாகிய சிதம்பரத்தில் உள்ள ஆலயத்தில் விளங்கும் திருச்சிற்றம்பலத்தில் திருநடனம் புரிந்தருளு' பவராகிய நடராஜப் பெருமானாரை வணங்கித் துதிப்பதற் காகத் தம்முடைய திருவுள்ளத்தில் மேவிப் பொங்கி எழும்