பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

荔4 பெரிய புராண விளக்கம்-10

பெருமையைப் பெற்று விளங்கும் விருப்பமாகிய வெள்ளத் தைத் தம்முடைய திருவுள்ளத்தில் வழங்க இணங்கும் குறித்த எண்ணத்தைத் தெரிந்து கொள்ளுமாறு திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரைப் பெறும் பொருட்டு தவத்தைப் புரிந்த சிவபாத இரு த ய ரு க்கு திருஞான சம்பந்த முர்த்தி நாயனார் பின்வருமாறு திருவாய் மலர்த், தருளிச் செய்தார். பாடல் வருமாறு:

" சிரபுரத்தில் அமர்ந்தருளும் திருஞான சம்பந்தர்

பரவுதிருத் தில்லைகடம் பயில்வாரைப் பணிக்தேத்த விரவிஎழும் பெருங்காதல் வெள்ளத்தை உள்ளத்தில் தர இசையும் குறிப்பறியத் தவமுனிவர்க் கருள்

செய்தார்.' சிரபுரத்தில்-சிரபுரமாகிய சீகாழியில். அமர்ந்தருளும் -தங்கிக் .ெ கா ன் டி ருந் த ரு ளு ம். திருஞான சம்பந்: தர்-திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார். பரவு-பக்தர்கள் புகழும்.பக்தர்கள்:தோன்றா எழுவாய்.திரு.அழகிய,த்:சந்தி தில்லை-தில்லையாகிய சிதம்பரத்தில் உள்ள ஆலயத்தில் விளங்கும் திருச்சிற்றம்பலத்தில் இடஆகுபெயர். நடம் திருநடனம். பயில்வாரை-புரிந்தருளுபவராகிய நடராஜப் பெருமானாரை. ப்: சந்தி. பணிந்து-வணங்கி. ஏத்த-துதிப் பதற்காக. விரவி-தம்முடைய திருவுள்ளத்தில் மேவி. எழும். பொங்கி எழும். பெரும்-பெருமையைப் பெற்று விளங்கும். காதல்-விருப்பமாகிய, வெள்ளத்தை-நீர் வெள்ளத்தை. உள்ளத்தில்-தம்முடைய திருவுள்ளத்தில், தர-வழங்க. இசை யும்-இணங்கும். குறிப்பு-குறித்த எண்ணத்தை. அறியதெரிந்து கொள்ளுமாறு. த், சந்தி. தவம்-திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரைத் தம்முடைய புதல்வராகப் பெறும் பொருட்டுத் தவத்தை. முனிவர்க்கு-புரிந்த அந்தணராகிய சிவபாத இருதயருக்கு அருள் செய்தார்.அவருடைய புதல் வராகிய திருஞான சம்பந்த மூர் த் தி நாயனார். பின் வருமாறு திருவாய் மலர்ந்தருளிச் செய்தார்.

பிறகு வரும் 143-ஆம் பாடலின் கருத்து வருமாறு: