பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் புாாணம் 235 ...

'ஆளுடைய பிள்ளையாராகிய திருஞான சம்பந்த: மூர்த்தி நாயனார் அவ்வாறு திருவாய் மலர்ந்தருளிச்

செய்யப் பெருமையைப் பெற்று விளங்கும் தவத்தின் பயனாக

அந்தத் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரை ஈன் றெடுத்த வள்ளலாராகிய சிவபாத இருதயரும் தம்முடைய புதல்வரோடு போவதற்குத் தம்முடைய திருவுள்ளத்தில்

களிப்பை அடைய பெருமையைப் பெற்று விளங்கும் வெள்ளி

மலையாகிய கயிலாய மலை என்று கூறுமாறு விளங்குவதும், சீகாழியில் உள்ள பிரமபுரீசருடைய ஆலயத்தில் இருக்கும் கட்டு மலையின் மேல் விளங்கும் அழகிய தோனியில் அமர்ந் திருந்த புள்ளிகளைப் பெற்ற மான் தோலை உடுத்தவராகிய தோனியப்பரை அந்தத் திருஞான சம்பந்த மூர்த்தி நாய னார் வணங்கி விட்டு அந்தத் தோனியப்பர் வழங்கிய திருவருளோடு சீகாழியை விட்டுப் புறப்பட்டு அப்பால் எழுந்தருளினார். பாடல் வருமாறு: - " பிள்ளையார் அருள்செய்யப் பெருந்தவத்தால்

பெற்றெடுத்த

வள்ளலார் தாமும் உடன் செல்வதற்கு மனம்களிப்பு

؛نو

வெள்ளிமால் வரை என்னத் திருத்தோணி வீற்றிருந்த

புள்ளிமான் உரியாரைத் தொழுதருளாற் புறப்பட்டார்.' பிள்ளையார்-ஆளுடைய பிள்ளையாராகிய திருஞான சம்பத்த மூர்த்தி நாயனார். அருள் செய்ய-அவ்வாறு திரு வாய் மலர்ந்தருளிச் செய்ய. ப்: சந்தி. பெரும்-பெருமையைப் பெற்று விளங்கும். தவத்தால்-தவத்தின் பயனால் ஆகு பெயர். பெற்றெடுத்த-அந்தத் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரை ஈ ன்றெ டு த் த. வள்ளலார்தாமும்-வள்ள வாராகிய சிவபாத இருதயரும். தாம்: அசைநிலை. வள்ளலார்-அரும்பெரும் செல்வத்தைப் போன்ற திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரை ஈன்றெடுத்து வழங்கிய உண்மையை உடைய சிவபாத இருதயர். உடன் தம்முடைய புதல்வரோடு. செல்வதற்கு-போவதற்கு மனம்-தம்முடைய

திருவுள்ளத்தில். களிப்ப-களிப்பை அடைய. வெள்ளி மால்.