பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242 பெரிய புராண விளக்கம்.10

தில். எதிர் கொள-தம்மை எதிர் கொண்டு வரவேற்க. கொள: இடைக்குறை. க்: சந்தி. கொள்ளிடம்-கொள்ளிட் ஆற்றை. கடந்து-தாண்டி. ஏறி-அதன் கரையின் மேல் ஏறி.

அடுத்து வரும் 147-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

'சீகாழியில் உள்ள பிரமபுரீசருடைய ஆலயத்தில் இருக்கும் கட்டுமலையின் மேல் வீற்றிருக்கும் பெரிய நாயகியார் தம்முடைய கொங்கைகளிலிருந்து கறந்து ஒரு பொற்கிண்ணத்தில் வைத்துச் சிவஞானத்தைக் குழைத்து வழங்கிய சிவஞான மாகிய அருமையாக உள்ள அமுதத்தைப். போன்ற பாலைக் குடித்தருளியவராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் பலராகக் கூடியுள்ள பிரமபுரீசருடைய திருத்தொண்டர்கள் கூடியுள்ள கூட்டத்தோடும் தம்மோடு கூட வரும் தம்மோடு பழகிய வேதியர்கள் தம்மைச் சுற்றி வரத் தாம் போகும் நல்ல கதியினுடைய பிரயோசனத்தைப் பார்ப்பவரைப் போல மகிழ்ச்சி தம்முடைய திருவுள்ளத்தில் மிகுதியாகப் பொங்கி வருமாறு பார்த்து மிகுதியாகக் கூடியுள்ள தேவர்கள் முதலாக உள்ள எல்லா வகையாகிய உயிர்களும் நடராஜப் பெருமானாரைப் பணிய அந்த உயிர் கள் வேண்டிய வரங்கள் எல்லாவற்றையும் வழங்கியருளும் நடராஜப் பெருமானார் திருக்கோயில் கொண்டு எழுந்: தருளியிருக்கும் தில்லையாகிய சிதம்பரத்தைச் சுற்றியிருக்கும். அழகிய எல்லையில் அந்த நாயனார் நடராஜப் பெரு மானாரை வணங்கினார். பாடல் வருமாறு:

மல்கு தொண்டர்தம் குழாத்தொடும் உடன்வரும்.

பயில்மறை யவர் சூழச்

செல்க திப்பயன் காண்பவர் போற்களி சிந்தைகூர் தரக்கண்டு -

மல்கு தேவரே முதலனைத் துயிர்களும் வணங்கவேண் டினவெல்லாம்

கல்கு தில்லைசூழ் திருஎல்லை பணிந்தனர்

ஞான ஆ. ரமுதுண்டார்.'