பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் புராணம் 忍4岛

இந்தப் பாடவில் விற்பூட்டுப் பொருள் கோள் அமைந் துள்ளது. ஞான-சீகாழியில் உள்ள பிரமபுரீசருடைய ஆலயத் தில் இருக்கும் கட்டுமலையின்மேல் வீற்றிருக்கும் பெரிய நாயகியார் தம்முடைய கொங்கைகளிலிருந்து கறந்து ஒரு பொற்கிண்ணத்தில் வைத்துச் சிவஞானத்தைக் குழைத்து வழங்கிய சிவஞானமாகிய, ஆரமுது-அருமையாக உள்ள அமுதத்தைப் போன்ற பாலை: உவம ஆகுபெயர். உண்டார்குடித்தருளியவராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார். மல்கு-பவராகக் கூடியுள்ள, தொண்டர்தம்-பிரமபுரீ, சருடைய தொண்டர்கள்: ஒருமை பன்மை மயக்கம். தம்: அசைநிலை. குழாத்தொடும்-கூடியுள்ள கூட்டத்தோடும். உடன் வரும்-தம்மோடு கூட வரும். பயில்-தம்மொடு பழகிய. மறையவர்-வேதியர்கள்: ஒருமை பன்மை மயக்கம். குழிதம்மைச் சுற்றி வர. ச்:சந்தி. செல்-தாம் போகும். கதி.நல்ல கதியினுடைய, ப்:சந்தி. பயன்-பிரயோசனத்தை. காண்பவர் போல்-பார்ப்பவரைப் போல. களி-ஆனந்தம். சிந்தை. தம்முடைய திருவுள்ளத்தில். கூர்தர-மிகுதியாகப் பொங்கி வருமாறு. க்சந்தி, கண்டு-பார்த்து. மல்கு-மிகுதியாகக் கூடியுள்ள. தேவர்-தேவர்கள்: ஒருமை பன்மை மயக்கம். ஏ:அசைநிலை. முதல்-முதலாக உள்ள. அனைத்து உயிர்களும் -எல்லா வகையான உயிர்களும். வணங்க-நடராஜப் பெரு மானாரைப் பணிய. வேண்டின-அந்த உயிர்கள் வேண்டி யவை. எல்லாம்-எ ல் லா வ ற் றை யு. ம். நல்கு-வழங்கி யருளும். தில்லை-நடராஜப் பெருமானார் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியிருசகும் தில்லையாகிய சிதம்பரத்தை. சூழ்-சுற்றியிருக்கும். திரு.அழகிய. எல்லை-எல்லையில், பணிந்தனர்-அந்த நாயனார் நடராஜப் பெருமானாரை வணங்கினார். .

பிறகு உள்ள 148-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு:

'சிவப்பாக விளங்கும் கண்களைப் பெற்ற இடப வாகனத்தை ஒட்டுபவராகிய நடராஜப் பெருமானார் திருக் கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் தில்லையாகிய