பக்கம்:பெரிய புராண விளக்கம்-10.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 f பெரிய புராண விளக்கம்-10

சிதம்பரத்தையே பார்த்து, இந்தத் திருத்தமாக அமைந்த உலகத்தில் வாழும் மக்கள் எல்லாருக்கும் மங்கலத்தை வழங்கியருளும் மிக்க இளம்பருவத்தைப் பெற்ற யானை யைப் போன்றவராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் எழுந்தருளும் இரண்டு பக்கங்கள் ஆகிய எல்லா இடங் களிலும் தங்கிக் கொண்டிருக்கும் பலவகையாகிய பறவைகள் கூவும் சத்தங்கள் தம்மை வாழ்த்தும் வார்த்தைகளை எடுத்துக் கூற, தமக்கு முன்னால் உள்ள நீர் நிரம்பிய பொய்கையில் வளர்ந்திருக்கும் செந்தாமரை மலர்களில் உள்ள தேனினுடைய நறுமணம் பொங்கி எழும் சிவப்பாக இருக்கும் அரும்புகளாகிய கைகளைக் குவித்துக் கும்பிட்டு மலர்ச்சியைப் பெற்ற முகத்தைத் தோற்றுமாறு செய்தன அந்தச் செந்தாமரை மலர்கள். பாடல் வருமாறு:

செங்கண் ஏற்றவர் தில்லையே நோக்கிஇத்

திருந்துல கினிற்கெல்லாம் மங்க லம் தரு மழவிளம் போதகம் வரும் இரு மருங்கெங்கும் தங்கு புள்ளொலி வாழ்த்துரை எடுத்துமுன்

தாமரை மதுவாசப் பொங்கு செம்முகை கரங்குவித் தலர்முகம்

காட்டின புனற்பொய்கை."

செம்-சிவப்பாக விளங்கும். கண்-கண்களைப் பெற்ற: ஒருமை பன்மை மயக்கம். ஏற்றவர்-இடபவாகனத்தை ஒட்டுபவராகிய நடராஜப் பேருமானார் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும். தில்லையே-தில்லையாகிய சிதம்பத்தையே. நோக்கி-பார்த்து. இத்திருந்து-இந்தத் திருத்தமாக அமைந்துள்ள. உலகினிற்கு எல்லாம்-உலகத்தில் வாழும் மக்கள் எல்லாருக்கும்; இட ஆகுபெயர். மங்கலம்மங்கலத்தை. தரு-வழங்கியருளும். மழ இளம்-மிக்க இளம் பருவத்தைப் பெற்ற, போதகம்-யானையைப் போன்ற வராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார்; உவம ஆகு பெயர். வரும்-எழுந்தருளும். இரு-இரண்டு. மருங்கு